உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


திட்டங்களை ஏற்படுத்துவதற்காக திரும்ப திரும்ப கொடுக்கப் படாதவையும், மறுபடி ம்றுபடி கொடுக்கப் படுகின்றவையு மான கடனைப் பஞ்சாயத்து யூனியன்களுக்கு ராஜ்ய மற்றும் கிராமக் கைத்தொழில்கள் போர்டு கிடைக்கச் செய்யும் ; இந்தத் திட்ட்த்தின்படி அரசாங் கம் அவ்வப்பொழுது பிறப்பிக்கிற உத்தரவுகளின்படி இந்தக் கடன்கள் கொடுக்கப் படும். பின்வரும் திட்டங்களை எல்லாப் பஞ்சாயத்து யூனியன் களிலும் கையாள்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருக் கிறது. (1) கருமார் வேலை ; (2) தச்சு வேலே , (3) தேனி வளர்த் தல் ; (4) செங்கல் செய்தல் : (5) மண்பாண்டம் செய்தல்; (6) தோல் பதனிடுதல் ; (7) அபிவிருத்தி அடைந்துள்ள கருவிகளை விநியோகித்தல் ; (8) மெல்லிய கயிறு, சரடு , (9) தையல், எம்பிராய்டரி. 78. ஸ்தாவர சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது எப்படி? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தனக்குச் சொந்தமான எந்த ஸ்தாவர சொத்தையும் குத்தகைக்கு விடலாம். இந்தக் குத்தகைக் காலம் மூன்று வருஷங்களுக்கு மேல் நீடித்தாலும், குத்தகைதாரர் கலெக்டருடைய உத்தரவில்லாமல், ஏதாவ தொரு கட்டிடத்தையாவது, எந்தப் பொருள்களால் ஆன ஒரு கட்டுக் கோப்பையாவது அனுமதிக்கப்பட்டாலும் இந்தக் குத்தகை செல்லத் தக்கதாகாது. - பஞ்சாயத்து யூனியனுக்குச் சொந்தம் அல்லாத ஆளுல், அதனிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்தாவர சொத்துக்களை, |சாலை ஓரங்களையும் தெருவின் ஒரங்களையும் தவிர பஞ் சாயத்து யூனியன் கவுன்சில் பின்வரும் நிபந்தனைக்கு உட்பட்டு குத்தகைக்கு விடலாம். ஒரு தரம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் பொறுப்பில் எந்த நிபந்தனைகளின் மீது ஒப்படைக்கப் பட்டதோ அந்த நிபந்தனைகளு மீறி நடக்கும் விதமாகவும், பன்னிரண்டு மாதங் களுககு அதிகமான ஒரு காலத்திற்கும் கலெக்டரின் முன் அனுமதி இல்லாமல் கொடுக்கப்படக் கூடாது. குத்தகை எடுத்தவர் கலெக்டரின் முன்அனுமதி இல்லாம்ல், எந்த் ஒரு கட்டிடத்தையாவது கட்டுக்கோப்பையாவது அமைக்க அஇ மதிக்கப்படக் கூடாது.