உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


79. சாலை ஓரங்களையும், சாலையின் பக்கங்களையும் குத்தகைக்கு விடுவது எப்படி? இந்தக் குத்தகைகளின் காலம், பன்னிரண்டு மாதங் களுக்கு அதிகப்படாமல் இருக்குமானல், இந்த குத்தகைகளைப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் விடலாம். இதற்கு அதிகமான் குத்தகைக்கு கலெக்டரின் சம்மதத்துடன்தான் விடமுடியும். மூங்கில் போன்ற பொருள்களால் அமைக்கப்பட்ட ஒரு கட்டுக் கோப்புகளுக்கு அனுமதிக்கலாம். அவற்றை குத்தகைக்கு விடலாம். சாதாரணமாக மூன்று வருஷத்திற்கு அதிகமான காலத்திற்கு எந்த ஒரு குத்தகையையும் விடக்கூடாது. அப்படிப்பட்ட குத்தகைகளைப் புதுப்பிக்கக் கலெக்டரின் அனுமதி அவசியம் இல்லை. 80. ஆக்கிரமிப்புகளுக்கு லைசென்ஸ் உண்டா ? பஞ்சாயத்து யூனியன் கமிஷனர், கவுன்சிலின் சம்மதத் துடன், தாம் விதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளுக்கும் நிபந்தனை களுக்கும் உட்பட்டு எந்த ஒரு இடத்தின் சொந்தக்காரர் அல்லது உபயோகிப்பவருக்குத் தாழ்வாரங்கள்; பால்கனிகள், நிழல்தரும் தட்டிகள் மற்றும் இவை போன்றவைகளே, பஞ்சா யத்து யூனிய்ன் கவுன்சிலின் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பொதுச் சாலைக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும்படி அமைத்துக் கொள்ள லைசென்ஸ் கொடுக்கலாம். அந்த அமைப்பு தற்காலிகமான பொருள்களால் ஆகியதாக இருப் பினும், லைசென்ஸ் காலம் பன்னிரண்டு மாதங்களுக்கு அதிகப்படாமல் இருக்குமானலும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலால் லைசென்ஸு கொடுக்கப்படலாம். அல்லது புதுப்பிக்கப் படலாம். அந்த அமைப்பு, நிலையான தன்மை உள்ளதாக இருப்பினும், லைசென்ஸ் காலம் ஒரு வருஷத்திற்கு அதிகப்படுமானலும், கலெக்டருடைய முன்கூட்டிய சம்மதம் அவசியம், லைசென்ஸை புதுப்பிப்பதற்கு கலெக்டருடைய சம்மதம் அவசியம் இல்லை. 81. தற்காலிக அமைப்புகள் மற்றும் பந்தல்களுக்கு லைசென்ஸ் உண்டா ? ஹைவேஸ் மற்றும் ரோடு ஒர்க்ஸ் இலாகாவில் இருக்கும் சாலை ஓரங்களில், பந்தல் மற்றும் தற்காலிகமான அமைப்பு களைக் கட்டுவதற்கு லைசென்ஸ் கொடுக்க பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. நிரந்தரமான அல்லது தற் 9