பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


காலிகமான காலங்கள் சம்பந்தமாகப் பஞ்சாயத்து யூனியன் அவுன்சிலும் சம்பந்தப்பட்ட இலாகாக்களும் நிர்ணயிக்கிற பொதுவான விதிகளுக்கு உட்பட்டு இந்த லைசென்ஸ் கொடுக் கப்படவேண்டும். 82. குற்றச்சாட்டுகள் என்ன? அபராதங்கள் எவ்வளவு ? கீழ்க்கண்ட சட்டங்களில் விதிக்கப்பட்டபடி, நீதிமன்றங் கள் வசூலித்த அபராதங்களைச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஆனியன்களுக்கு வரவு வைக்க வேண்டும். (1) 1958 ஆண்டு, சென்னை பஞ்சாயத்துச் சட்டம் ; (2) இந்தியன் பீனல் கோடு, 1861-ன் கீழ் நியூசென்ஸ் ; (3) சென்னை, நகர நியூசென்ஸ் சட்டம் 1889, (4) சென்னை ஜனன மரண ரிஜிஸ்தர் சட்டம் 1899 : (5) பொது மக்கள் உபயோகத்திற்கான இடங்கள் பற்றிய சட்டம் 1888 ; (6) சென்னை கலப்படத் தடைச் சட்டம் 1954 ; (7) சென்னை பொதுச் சுகாதாரச் சட்டம் 1939; (8) சென்னை தமாஷா வரிச் சட்டம் 1939 : இந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் மாஜிஸ்திரேட்டுகள் விதிக்கிற அபராதங்களை வசூலித்து முதன் முதலாக ராஜ்ய நிதிக்கு வரவு வைக்கப்படுகிறது ; பிறகு, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குக் கொடுக்கப்படுகிறது. அரசாங்கம், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் களின் கணக்கில் டிரஷரியில் இந்தப் பணத்தை வரவு ன்வப்ப தன் மூலம் இது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 83. சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் அனுபோக உரிமைகள் எவை? சாலை ஓர மரங்கள் விற்பனை ; பஞ்சாயத்து யூனியன் கமிஷனரால் அல்லது அவருடைய அதிகாரம் பெற்ற ஒரு அதிகாரியால் விற்பனை செய்யப்பட்டு, பஞ்சாயத்து யூனிய்ன் கவுன்சிலால் உறுதி செய்யப்படவேண்டும். சால்ை இர மரங் களின் மகசூலை ஒரே தடவையில் மூன்று வருஷங்களுக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது.