பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


ஒவ்வொரு ஜில்லா போர்டு ரஸ்தாவும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு உரியதாக இருக்கும். ரஸ்தாவின் ஒரத் ல் உள்ள மரங்களும் கூடச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சொந்தமாக இருக்கும். அந்த மரங் களின் அனுபோக உரிமைகளை ஏலத்திற்கு விடும் உரிமை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு உண்டு. அந்த மரங்களின் அனுபோக உரிமையைப் பஞ்சாயத்துகளுக்குக் குத்தகைக்கு விடும் உரிமை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலினிடம் இருக்கிறது. 84. ஸ்டாம்பு தீர்வையின் மீது சர் சார்ஜ் எவ்வளவு? 1899 ஆம் வருஷத்திய இந்திய ஸ்டாம்புச் சட்டமானது. சென்னை ராஜ்யத்தில் அமுலில் இருக்கிறபடி, அதில் கூறப் பட்டுள்ள விவரங்களைக் கொண்ட சட்டரீதியான ஒவ்வொரு தஸ்தாவேஜின் மீதும் ஒரு தீர்வையை விதிக்கிறது. இந்தத் தீர்வையின் மீது விதிக்கப்படுகிற ஒரு ஸர்-சார்ஜ் (உபரி வரி) உருவத்தில் சொத்து மாற்றங்களுக்கு 124 பிரிவின்படி விதிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு ஒரு பஞ்சாயத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்திலிருக்கும் ஸ்தாவர சொத்துக்கள் பற்றியது. இந்த உபரி வரி விகிதத்தை அரசாங் கம் நிர்ணயம் செய்யும். 1951 ஆம் வருஷத்திய சென்னை பஞ்சாயத்துகள் விதிகளின் (சொத்துக்கள் மாற்றத்தின் மீது விதிக்கப்படும் தீர்வை) 8-வது விதியின் படி ஒவ்வொரு தஸ்தா வேஜின் மீதும் கூறப்பட்டுள்ள தொகையில் 5 சதவிகிதத்திற்கு மேல் இந்த உபரி வரி அதிகமாக இருக்காது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஒவ்வொரு கால் வருஷ முடிவி லிருந்து மூன்று மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து களுக்கு அவற்றிற்குச் சேரவேண்டிய தொகைகளை, 1958 ஆம் வருஷத்திய சென்னை பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவு 24 (3) ல் கூறப்பட்டுள்ள முறைப்படி கொடுக்கவேண்டும். 85. தமாஷா வரி-கண் காட்சி வரியின் மீது சர் சார்ஜ் 1961 ஆம் வருஷத்து சென்னை ஸ்தல அதிகார சபைகளின் நிதிச் சட்டமானது. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் ஒரு லர் சார்ஜ் உருவத்தில் பின் வருவனவற்றை விதிக்க அதிகாரம் அளிக்கிறது.