133 பொது நிதி : பொது வரும்ா னங்கள், அவற்றின் நிர்வாகம், தொடர்பு, ஆரோக்கியம், வைத்திய உதவி உள் ளிட்ட நலன், ஆரோக்கியப் பாதுகாப்பு, மற்றும் ஜனன மரணங்கள், லாபம் தரும் முயற்சிகள் (மார்க்கெட்டுகள் உட்பட). நில அபிவிருத்தி, ஒதுக்கப்படாத காடுகள், டெபா சிட்டுகள், கடன்கள் ஆகியவை பற்றி பொது நிதி செயல் படுகின்றது. கல்வி நிதி : ஆரம்பப்பள்ளிகளை ஆரம்பித்தல் ;அவற்றை நடத்தி வருதல் ; மதிய உணவு கொடுத்தல்; தனியார் நடத் தும் ஆரம்பப் பள்ளிகளுக்கு மான்யம் கொடுத்தல் ஆகிய விஷயங்கள் பற்றியது கல்வி நிதி. - உற்பத்தி நிதி : நீர்ப்பாசனம் உட்பட, வி. வ ச ய_ம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்கள் ; பிரா னி களே வளர்ப்பது; மீன் வளர்ப்பது ; கதர் மற்றும் கிராமக் கைத் தொழில் பற்றியது உற்பத்தி நிதி. 88. தணிக்கையாளர்களே நியமனம் செய்வது ஏன்? ப ண் டு களின் கணக்குகளைப் பரிசோதிப்பவர் தான், (எக்ஸாமினர் ஆப் லோக ல் பண்டு அக்கவுண்ட்ஸ்) பஞ்சாயத்து யூனியனுடைய வரவு செலவு நிதிக் கணக்குகளைத் தன்னிக்கை செய்யும் ஆடிட்டர். மேலே கூறப்பட்டுள்ள நிதிக் கணக்குகள் எல்லாம் அவருடைய தணிக்கைக்கு உட்பட்டவை. மேற்படி தணிக்கையாளர்களின் சம்பளங்களுக்கும் அலவன்ஸ்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கணக்கு களை தணிக்கை செய்வதற்காக ஏற்படும் செலவுகளுக்கும் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிடமிருந்து எவ்வித நிதி உதவியும் அரசாங்கம் பெற்றுக்கொள்ளக் கூடாது. தணிக்கையாளரின் ஆட்சேபனைக் குறிப்பு களுக் கு பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் சரியான முறையில் பதில் சொல்லியாக வேண்டும். முடிவாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனை சம்பந்தமான அறிக்கையை, நிர்ணயிக்கப்பட்ட நமூனவில் அவ்வப்பொழுது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அரசாங் கத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/167
Appearance