134 89. பட்ஜட்டை தயாரிப்பது எப்படி? அனுமதி அளிப்பது யார் ? பஞ்சாயத்து யூனிய்ன் கவுன்சில்களினுடைய வரவு செலவு திட்டங்கள்ை தயாரிப்பதும் அனுமதி அளிப்பதும் சட்டத்தின் 140 பிரிவின் அம்சங்களுக்கும், அரசாங்கமும் அதிகாரம் பெற்ற மற்ற அதாரிட்டிகளும் அவ்வப்பொழுது வெளியிடும் விதிகளுக்கும் கட்டுப்பட்டவை. பஞ்சாயத்து யூனியனில் அடுத்த நிதி ஆண்டில் ஒவ்வொரு நிதியின்கீழும் எதிர் பார்க்கப்படுகிற வரவு செலவுகளின் மதிப்பீட்டைத் தயாரிக்க வேண்டும்; இதை விதிக்கப்பட்டுள்ள முறையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் தயாரித்து, கலெக் உருக்கு, ரெவின்யு டிவிஷனல் அதிகாரி மூலமாக தேவையான துணை அறிக்கைகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். பட்ஜட்டை தயாரிப்பதில், வருஷம் முழுவதிலும், அவசி யமான ஒவ்வொரு சேவைக்காக கொடுக்கப்பட வேண்டியது என்று எதிர்பார்க்கப்படுகிற தொகைக்கும் நிதி ஒதுக்க வேண்டும். பட்ஜட் வருஷம் துவங்குமுன் நிறைவேற்ற முடியாத பொறுப்புகள் எல்லாவற்றிற்கும் பணம் ஒதுக்க வேண்டும். பட்ஜட் தயாரிக்கிற வருஷத்தின் வருமான மதிப்பீட்டில் 5%க்கு குறையாத ஒரு தொகையை நடைமுறை வீதம் (working balance) என்று ஒதுக்கி வைக்க வேண்டும். (எண்டோ மென்டுகளிலிருந்தும் அரசாங்க மான்யங்களி லிருந்தும் வருவனவற்றை விலக்கி, வருமானத்தை மதிப்பிட வேண்டும்.) கலெக்டர், பட்ஜட்டைப் பரிசீலனை செய்து அவசியமான ஆலோசனைகளைக் கூற வேண்டும். பொருத்தமானவை என்று தாம் கருதுகிற மாறுதல்களுடன் பட்ஜட்டைப் பஞ்சாயத்து யூனியன் அனுமதி அளிக்க வேண்டும். கலெக்டருக்கும் பஞ்சாயத்து யூனியனுக்கும் இடையில் கருத்து வேற்றுமை இருக்குமானல், பட்ஜட்டை கூட்டு அபிவிருத்தி கமிஷனரின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். தம் உசிதம்போல், பட்ஜட்டை மாற்றி அமைக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. நிர்ணயிக்கப்பட்டிருக்கிற அமைப்பில் பட்ஜட்டையும் அதனுடன் கவுன்சிலின் தீர்மானத்தையும் பெற்றுக்கொண் டதும் கூட்டு அபிவிருத்தி கமிஷனர் தகுதியென தாம் கருதுகிற உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/168
Appearance