பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 உத்தரவுகள் எல்லாவற்றையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிறைவேற்ற வேண்டுவது அதன் கடமையாகும். வருஷம் முழுவதிலும் செய்யப்படுகிற செலவுகள் எல்லாம் பட்ஜட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகைகளுக்குப் பொருந்தி யிருக்குமாறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். பட்ஜட்டில் சேர்க்கப்பட்டிராத எந்த ஒரு செலவு இனத்தையாவது, அல்லது பட்ஜட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு அதிகமாக உள்ள ஒரு செலவு இனத்தையாவது கவுன்சில் ஒத்துக் கொள்ளக் கூடாது. ஏதாவது ஒரு செலவைச் செய்வதற்கு, அரசாங்கத்தின் அனுமதி அல்லது வேறு ஏதேனும் ஒர் அதிகாரியின் அனுமதி தேவையாய் இருக்கும் சந்தர்ப்பத்தில், அந்தச் செலவிற்காகப் பட்ஜட்டில் தொகை ஒதுக்கப்பட்டிருக்குமானல், செலவு செய்வதற்கு முன்பாகவே அந்த அனுமதியைப் பெற். வேண்டும். - ஒரு வருஷத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் (அலாட் மெண்டுகள்) எல்லாம் வருஷத்தின் முடிவில் காலாவதி ஆகிவிடுகின்றன. வருஷமுடிவில் அலாட் மெண்டுகளின் பகுதிகள் செலவு செய்யப்படாமல் இருக்குமானல், வருஷம் முடிந்த பிறகு, பட்டுவாடா செய்வதற்காகச் செலவழிக்கப் படக் கூடாது ; அவற்றை வேறு எந்தக் கணக்கின் இனத் திற்கும் உபயோகிக்கக் கூடாது. 90. பொருள்களையும், சாமான்களையும் வாங்குவது எப்படி? மூலப் பொருள்களையும் சாமான்களையும் சப்ளை செய்வது, வேலைகளை (ஒர்க்ஸ்) செய்வதற்கு அல்லாமல்; பிற சேவைகளை புரிவது ஆகிய விஷயங்களில் 400 ரூபாய்க்கு மேல் போகாமல், எவ்வளவு தொகைக்கு டெண்டர்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தீர்மானம் செய்யலாம். சாதாரணமாக எல்லாவற்றிலும் குறைவான டெண்டரைத் தான் கவுன்சில் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றி லும் குறைவான டெண்டரை ஏற்றுக் கொள்வது, விரும்பத் தகாதது என்று கருதப்படுமானல், அதற்கான காரணங்களைத் தெளிவாக எழுதி வைத்து, தணிக்கைக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில் டெண்டரையாவது விஷயங்களின் வகைகளேயாவது முடிவு