பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம வேலைகள் இலாகா (ஹைவேஸ் அண்டு ரூரல் ஒர்க்ஸ் டிபார்ட்மெண்ட்) என்று பெயர். திருத்தி அமைக்கப் பட்டுள்ள மாதிரியில், ஒவ்வொரு அபிவிருத்தி ஜில்லாவிற்கும் ஒரு டிவிஷனல் எஞ்சினியர் இருப்பார்; அல்லது ஏறத்தாழ ஒரு தாலுகாவிற்கு அதிகமான பிரதேசத்தின் மீது அதிகார எல்லையுடைய ஒரு உதவி எஞ்சினியரும் ஒவ்வொரு அபிவிருத்தி வட்டாரத்திற்கும் எல்லா வேலைகளையும் கவனிப்பதற்கு ஒரு ஜூனியர் எஞ்சினியரும் இருப்பார். பஞ்சாயத்து யூனிய்ன் எஞ்சினியர் பஞ்சாயத்திலுள்ள வேலைகள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார். அவர் பஞ்சாயத்து யூனியன் கமிஷனரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிருர் ; தொழில் துணுக்க வேலைகளில் ஹைவேஸ் அண்ட் ரூரல் ஒர்க்ஸ் டியார்ட் மெண்ட் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக் கிருர், யூனியனுக்குள் எல்லா வேலைகளையும் நிற்ைவிேற்று வதற்கும், எஸ்டிமேட்டுகளைச் சரியான காலத்தில் சமர்ப்பிக் கப்படுமாறு செய்வதற்கும் அவர் பொறுப்புள்ளவர். 93. டெண்டர்கள் கோருவது ஏன் ? வேலைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன. அவை: (1) புது வேலைகள் ; (ஒரிஜனல் ஒர்க்ஸ்) (2) பராமரிப்பு; என்பன. ஒப்பந்தத்தின் மூலம் செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும், வேலையின் மதிப்புத்தொகை ரூ. 1500க்கு மேற்படுமானல் டெண்டர்களை அனுப்புமாறு கோர வேண்டும், ஒரு பஞ்சாயத்தினிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் எந்த வேலையாவது, மதிப்பில் ரூ. 1500க்கு மேற் படாமல் இருக்குமானல், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் டெண்டர்களை அனுப்புமாறு கோர வேண்டிய அவசியமில்லை. அவசரம் காரணமாகவோ, விதிகளில் கூறப்பட்டுள்ள அதிகாரி களின் முன் அனுமதி பெற்று, ஏதாவது விசேஷ காரணங் களுக்காக, இந்தக் காரணங்களை எழுதி, பதிவு செய்தோ டெண்டர்களை கோராமல் இருக்கலாம். டெண்டர்களைக் கோராமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் கமிஷனர், ஒப்பந்தக்காரர்களின் ரிஜிஸ்தரிலிருந்து ஒப்பந்தக் காரர்களைப் பொறுக்கி யெடுத்து அவர்களைக் கொண்டு வேலை களைச் செய்து கொள்ளவேண்டும் ; விகிதங்கள் சாதாரணமாக எஸ்டிமேட் விகிதங்களை விட அதிகமாக இருக்கக் கூடாது.