உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 கொடுக்க அனுமதிக்கப் படமாட்டாது. அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளாவிட்டால், தன் தகுதிக்கு ஏற்ற படி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பணம் கொடுக்கப் பஞ்சாயத்து யூனியன் அனுமதிக்கப்படும். பஞ்சாயத்து யூனி யன் கவுன்சில்கள் விருப்பப்பட்டால், தங்களுடைய பொது நிதிகளிலிருந்து, பொதுநிதிகளில் உபரியாக இருக்குமானல் வருஷத்தில் ரூ 100-க்கு அதிகப்படாமல் கோயமுத்துார்ஜில்லா, பெரியநாயக்கன்பாளையம் பூரீ ராமகிருஷ்ண வித்யாலயத் திற்குக் கொடுக்கலாம் என்று துணை அபிவிருத்தி கமிஷனர் அனுமதி அளித்திருக்கிரு.ர். சென்னை பாரத் ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் சங்கத்துக்குப் பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்கள் நன்கொடைகள் வழங்கலாம். 98. விசேஷ செலவுகள் எப்படிச் செய்ய வேண்டும்? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் அரசாங்கத்தின் முன் அனுமதி இல்லாமல் மார்பு அளவு உள்ள சிலைகளையோ அல்லது முழு உருவச்சிலைகளையோ விலைக்கு வாங்குவதிலும் ஸ்தாபிப்பதிலும் எந்த விதமான பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், முற்றிலும் அசாதாரணமான சந்தர்ப்பங்கள் இருந்தாலன்றி த்தகைய அனுமதியை சாதாரணமாக அரசாங்கம் அனுமதிப்பதில்லை. மகாத்மா காந்தியின் உருவப்படத்தையும், இந்தியக் குடியரசு ஜனதிபதியின் உருவப்படத்தையும் வாங்குவதற்கும் தங்கள் எல்லைக்குள் ஸ்தாபிதம் செய்வதற்கும் தங்கள் நிதி களிலிருந்து செலவு செய்ய அனுமதி உண்டு. வேறு எவ ருடைய உருவப்படத்தையும் வாங்கவோ, தங்கள் எல்லைக ளில் ஸ்தாபிதம் செய்யவோ அவற்றிற்கு அனுமதி இல்லை, ஓர் உருவப்படத்திற்கு ஐம்பது ரூபாய் வரையில் வெளியாரின் அனுமதி இல்லாமல் செலவு செய்யலாம். நிர்வாகத்தில் சிறந்த சேர்மன்கள், தலைவர்கள், தங்களுடைய ஸ்தல ஸ்தாப னங்களின் பிரஸிடெண்டுகள் மற்றும் அங்கத்தினர்களின் உருவப்படங்களை, சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபனத்தின் கட்டிடத்திற்குள் ஸ்தாபிதம் செய்து, அவர்களுடைய சேவை களை நினைவு கொள்ளலாம். இவற்றிற்குத் தனிப்பட்டோரின் நிதிகளிலிருந்து செலவு செய்யப்பட வேண்டும். இந்திய தேசிய தலைவர்களின் படங்களை ஸ்தாபிதம் செய்வதற்கு, தனிப்பட்ட நிதி களி லிருந்து செய்யப்படாவிட்டால், அரசாங்கம் அனுமதி அளிக்கும். 3.