பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சென்னை அரசாங்க மந்திரிகளுக்கும் இந்திய யூனியன் மந்திரிகளுக்கும் வரவேற்பு உரை அளிப்பதற்குப் பஞ்சாயத்து ஆனியன் கவுன்சில்கள் ரூ. 50-க்கு அதிகப்படாமல் செலவு செய்யலாம் ; கவர்னருக்கு வரவேற்புரை அளிப்பதற்கு ரூ. 200 வரையில் செலவு செய்யலாம். விழாக்களுக்காவது, வரவேற் புரையை வைத்துக் கொடுப்பதற்குப் பேழைகளே வாங்கு வதற்காவது, கவுன்சில் நிதிகளிலிருந்து செலவு செய்யக் கூடாது. ஆண்டு விழாக்களைக் கொண்டாடுவதற்காகப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் செலவு செய்யக் கூடாது. வருஷத்திற்கு ஒரு தடவை நினைவு மலர் தயாரித்து வெளியிடுவதற்காகப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் 300 ரூபாய்க்கு அதிகப்படாமல் செலவு செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. நினைவு மலர் வெளியீடு கூடியவரையில் அதற்காக ஆகும் செலவை தானே ஈடுசெய்து கொள்ளும்படி கமிஷனர் செய்ய வேண்டும். இதற்காக விளம்பரங்களை நாடி, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை * நினைவு மலர் வெளியிடுவதற்குப் பயன் படுத்த வேண்டும். பெருந்துறை ராமலிங்கம் rயரோக ஸானடோரியத் திற்கு ஆண்டுதோறும் ரூ. 700 க்கு மேற்படாமல் நன்கொடை அளிப்பதற்கு துணை அபிவிருத்தி கமிஷனர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அனுமதி அளிக்கலாம். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள், ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 வீதம் சந்தாத் தொகை செலுத்தி, இந்திய செஞ்சிலு வைச் சங்கத்தின் அங்கத்தினர்களாவதற்கு துணை அபிவிருத்தி கமிஷனர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிரு.ர். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் தங்கள் அலுவலகங் களுக்கு டெலிபோன்களை வைத்துக் கொள்ள அரசாங்கத்தின் அனுமதி அவசியமாகும். 99. மருந்துகளை உள்ளூரிலேயே வாங்கலாமா? பின்கண்ட விஷயங்கள் சம்பந்தமாக, மருந்து ஸ்தாபனங் களிலிருந்து உள்ளூரிலேயே மருந்துகளை விலைக்கு வாங்கலாம் என்று அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. (1) தேவைக் குறிப்பில் அடங்கியுள்ள வகைப்பொருள் கள் ; ஆனால், மெடிகல் ஸ்டோர்ஸ் டிபோவினல் சப்ளை செய்யப்படாதவை. (2) மெடிகல் ஸ்ட்ோர்ஸ் டிபோவில்ை