பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 ஸ்டாக் செய்யப்படாத வகைகள் ; (3) சாதாரணமாக, மெடிகல் ஸ்டோர்ஸ் டிபோவில் ஸ்டாக் செய்யப்பட்டிருக்கும் வகைகள் ஆனால், பட்ஜெட்டில் இல்லாதவை; அவசர காலங்களில் ஸ்தலத்திலேயே விலைக்கு வாங்கு வதற்கான அதிக அளவு ரூ. 1000 என்று திட்டம் செய்யப் பட்டிருக்கிறது. 100, கமிஷனர்களர்ல், ஏற்பட்ட நஷ்டங்களை என்ன செய்வது ? கமிஷனர்களால் யூனியன் நிதிகளுக்கு ஏற்பட்ட நஷ்டங் களின் சந்தர்ப்பங்களை ஸ்தல நிதிகளின் கணக்குப் பரிசோதகர் அவசியமான மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் பொருட்டு துனே அபிவிருத்தி கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 101. அனுமதிக்க முடியாத இனங்கள் எவை? சட்டத்திற்கு விரோதமாக உள்ள ஒவ்வொரு இனத்தை ஆம் ஆடிட்டர் அங்கீகாரம் அளிக்காமல் தள்ளி விடலாம் ; சட்டத்திற்கு புறம்பான வகையில் பணம் கொடுக்கிற அல்லது கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கிறவர்மீது அவருடைய அலட்சியம் அல்லது ஒழுங்கீன நடத்தையால் ஏற்பட்ட குறைவு, நஷ்டம் அல்லது லாபம் தராத முதலீடுகளுக்கா கவோ, அல்லது அந்த நபரால், கனக்கில் கொண்டு வரப்பட் டிருக்க வேண்டியிருந்தும் அப்படி கொண்டு வரப்படாமல் இருக்கும் தொகைக்காகவோ குற்றம் சாட்டலாம். அத்தகைய சிந்தர்ப்பம் ஒவ்வொன்றிலும், அந்தத் தொகை அந்த நபரால் கொடுக்கப்பட வேண்டியது என்று அத்தாட்சி அளிக்கலாம். 102. கிராமப் பஞ்சாயத்துகளின் தொகுப்பு நிதியை நிர்வகிப்பது எப்படி? இந்த நிதி, பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் இருக்கிற எல்லா கிராமப் பஞ்சாயத்துகளின் சார்பாகவும், பஞ்சாய்த்து யூனியன் கமிஷனரால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திற்கும் அவர் தனித்தனியான கணக்குகள் வைத்திருப்பார். கிராமப் பஞ்சாயத்துகளின் சார்பாகப் பெறப்படுகிற எல்லா வரவுகளையும் கொண்டது இந்த நிதி, பஞ்சாயத்துகளின் தலைவர்கள், பணம் கொடுக்கும்