உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 களுடைய செயல்களுக்கும், செய்யவேண்டிய காரியங்களை அவர்கள் செய்யத் தவறியதற்கும், குறிப்பிட்ட ஒரு தேதிக்குள் முகாந்தரம் கூறவேண்டும் என அந்த நோட்டீசில் கேட்டிருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முகாந்தரம் கிடைத் தாலும், அது திருப்திதரக்கூடியது என்று அரசாங்கம் கருதி லுைம், அந்த நோட்டிஸ் சம்பந்தமான மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிடலாம். குறிப்பிட்ட தேதிக்குள் முகாந் தரம் ஒன்றும் கிடைக்கவில்லையானலும், கிடைத்த முகாந்தரம் அரசாங்கத்தின் அபிப்பிராயப்படி திருப்தி அளிப்பதாக இல்லை யானுலும். சேர்மனுக்கு அனுப்பிய நோட்டீஸ் மற்றும் சேர்மனின் அல்லது வைஸ்சேர்மனின் சமாதானம் ஆகிய வற்றின் நகல்களை ரெவின்யூடிவிஷனல் அதிகாரிக்கு அனுப்பப் படும்; அதனுடன் சேர்மனேயோ அல்லது வைஸ்சேர்மனையோ பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஒரு பிரேரணையும் சேர்த்து அனுப்பப்படும் ; ரெவின்யூடிவிஷனல் அதிகாரி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இந்தப் பிரேரணை யைப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அதன் கூட்டத்தில் சரி என்று ஒத்துக்கொள்ளுமானல், சட்டத்தின் பிரிவுகள், விதி களுக்கு கீழ்ப்படியாமை முதலியவற்றிற்காகவும் அல்லது அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவருன வழியில் பயன்படுத்தியதற்காகவும் சேர்மனேயாவது அல்லது வைஸ்சேர்மனையாவது பதவியிலிருந்து நீக்க அரசாங்கத்தார் உத்திரவு அனுப்புவார்கள் இதற்கு அரசாங்கம் விதித்துள்ள செயல்முறையை முதலில் அனுசரிக்க வேண்டும். பதவி யிலிருந்து நீக்கப்பட்ட சேர்மன் அல்லது வைஸ்சேர்மன், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு, அடுத்த சாதாரண் தேர் தல்கள் அறிவிக்கப்படும் தேதி வரையிலாவது அல்லது அறிக்கையில் கூறப்பட்டுள்ள் தேதியிலிருந்து ஒரு வருஷம் வரையிலாவது இவற்றில் எந்தத்தேதி முந்தியதோ அது வரையில், சேர்மஞகவோ அல்லது வைஸ்சேர்மனுகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் தகுதிஉள்ளவர் ஆகமாட்டார். 108. நம்பிக்கையில்லாத் தீர் மா ன ம் கொண்டு வருவது எப்படி ? ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் சேர்மன் அல்லது வைஸ்சேர்மனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான்ம் கவுன்ஸில் அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப் படுமானல், துணை அபிவிருத்தி கமிஷனருக்கு அவரைப் பதவி