i48 யிலிருந்து நீக்கிவிட அதிகாரம் உண்டு. பிரிவு 153-ல் கூறப் பட்டிருக்கிற நடைமுறையைச் சிறிதும் மாறுதலின்றிச் சம்பந்தப்பட்ட ரெவினியூ டிவிஷனல் அதிகாரி கடைப்பிடிக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக, உத்தேசம் இருக்கிறது என்பதைத் தெரிவித்து, எழுத்து மூல மாக ஒரு நோட்டீஸ், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரியிடம் கொடுக்கப்பட வேண்டும். அதனோடு தீர்மானத்தின் நகல் ஒன்றையும் சேர்மன் அல்லது வைஸ்சேர்மனுக்கு எதிரான குற்றச்சர்ட்டுகளின் பிரதி ஒன்றையும் நோட்டீசில் கையொப்ப மிடுகிற பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எந்த ஒரு அங்கத் தினராவது ரெவினியூ டிவிஷனல் அதிகாரியிடம் நேரிடை யாகக் கொடுக்கவேண்டும். ரெவினியூ டிவிஷனல் அதிகாரி, குற்றச்சாட்டுகளைக் கொண்ட அந்த அறிக்கையின் நகல் ஒன்றைச் சேர்மன் அல்லது வைஸ்சேர்மனுக்கு அனுப்பி குற்றச் சாட்டுகளுக்கு பதிலே-ஒரு வாக்குமூலத்தை ஒரு வாரத் திற்குள் அனுப்பவேண்டும் என்று சேர்மனுக்கு உத்தரவு இடுவார். பிறகு, ரெவினியூ டிவிஷனல் அதிகாரி அந்தத் தீர்மானத்தின்மீது விவாதம் எதுவும் நடத்தப்படக் கூடாது. பஞ்சாயத்து யூனியனின் அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத எண்ணிக்கையினரால் அந்த்த் தி ர் மா ன ம் நிறைவேற்றப்படுமானல், துணை அபிவிருத்தி கமிஷனர் சேர்மன் அல்லது வைஸ்சேர்மனை ஒர் அறிக்கையின்மூலம் நீக்கி விடுவார். சேர்மன் அல்லது வைஸ்சேர்மன் பதவியேற்ற முதல் ஆறு மாதத்திற்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது. சேர்மன் அல்லது வைஸ்சேர்மனுக்கு எதிராகக் கொண்டு வரப்படுகிற நம்பிக்கையில்லாத் தீர்மான அறிவிப்புக்கும்; அடுத்தஅறிவிப்புக்கும் இடையில் ஆறுமாதத் திற்குக் குறையாமல் இடைவெளி யிருக்கவேண்டும். 109. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களைக் கலைத்து - விடலாமா ? சட்டப் பிரகாரம் ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலி னிடம் கொடுக்கப்பட்டிருக்கிற கடமைகளைச் செய்யும் திறமை இல்லை என்று அரசாங்கம் கருதுமாளுல், அல்லது அந்தக் கடமைகளைச் செய்வதில் நிரந்தரமாகத் தவறிக் கொண்டே யிருக்குமானல், அல்லது தனது அதிகாரத்தை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/182
Appearance