149 துஷ்பிரயோகம் செய்யுமானல் அல்லது தன்னுடைய அதிகார வரம்பை மீறி நடந்து கொள்ளுமானுலும் அரசாங்கம் ஒரு அறிக்கையின் மூலம், குறிப்பிட்ட ஒரு தேதியிலிருந்து பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலைக் கலைத்து விடலாம். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கலைக்கப்பட்ட தேதி யிலிருந்து ஒரு வருஷத்திற்கு மேற்படாத ஒரு தேதிக்குள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலே மறுபடி அமைக்குமாறு உத்தரவிடலாம். அறிக்கையை வெளியிடுவதற்குமுன் ஏன் கலைத்துவிடக் கூடாது?’ என்பதற்குக் காரணம் காட்டுவதற்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அரசாங்கம் ஒர் சந்தர்ப்பம் தர வேண்டும் ; அதனுடைய சமாதானத்தையும்,ஆட்சேபணைகள் எவையேனும் இருக்குமாளுல் அவற்றையும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலைக் கலைப்பதற்கும் திரும்ப அமைப்பதற்கும் இடையில் உள்ள காலத்தில் இன்ஸ் பெக்டர் துணை அபிவிருத்தி கமிஷனர் தாசில்தாரின் அந்தஸ்திற்குக் குறையாத அந்தஸ்துள்ள ஒருவரை நியமனம் செய்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலினுடையவும் அதன் சேர்மனுடையவும் கடமைகளை நிறைவேற்றலாம். 110. அதிகாரங்களை டெலிகேட் செய்வது ஏன்? பஞ்சாயத்து.யூனியன் கவுன்சில்களினிடம் சட்டத்தின்படி கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரங்களில் எவற்றையாவது செயல் புரியுமாறு, கலெக்டரின் அந்தஸ்துக்குக் குறையாத ஒரு அதாரிடி அல்லது அதிகாரிக்கு அறிவிப்பு மூலம் அரசாங்கம் அதிகாரம் அளிக்கலாம். ஆனால், விதிகளை வகுக்கும் அதிகாரம் அவரிடம் கொடுக்கப்படமாட்டாது. அல்லது அரசாங்கம் அந்த அதிகாரத்தை வாபஸ் பெறலாம், இன்ஸ்பெக்டர் (துணை அபிவிருத்தி கமிஷனர் அல்லது கலெக்டர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் சம்பந்தமாகத் தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல் புரியுமாறு ரெவினியூ டிவிஷனல் அதிகாரி அந்தஸ்துக்குக் குறையாத எந்த அதிகாரிக்காவது அதிகாரம் கொடுக்கலாம் அல்லது அந்த அதிகாரத்தை வாபஸ் பெற்று விடலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/183
Appearance