உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அரசாங்கம் அல்லது மேலே கூறப்பட்டுள்ள அதிகாரிகள் கூறுகிற நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இந்த டெலி கேஷன் கட்டுப்பட்டதாகும். 11. பஞ்சாயத்து நிதியின் டைரக்டர் பதவியை ஏற்படுத்துவது ஏன் ? பஞ்சாயத்துச் சட்டத்தை வெற்றிகரமாக அமுல் நடத்து வதற்கும், பஞ்சாயத்து யூனியன்கள் தேசீயத் திட்டத்தில் தமக்கு உரிய பங்கை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம், பஞ் சாயத்து நிதியின் டைரக்டர் பதவியை ஏற்படுத்தியிருக்கிறது. துணை அபிவிருத்தி கமிஷனருக்கு உதவியுடன் அவருடைய முக்கியமான கடமைகள் பின்வருமாறு : ப ஞ் சா ய த் து அபிவிருத்தியின் திட்டப்படியான பட்ஜெட்டை பரிசீலனை செய்வதும், யூனியன்களுக்கு அவசிய மானபடி வழிகாட்டுவதும் ; பஞ்சாயத்து யூனியன்களின் வருஷாந்திரப் பட்ஜெட்டு களையும் அந்தப் பட்ஜெட்டுகளின்படி செய்யப்படும் செலவின் முன்னேற்றத்தையும் பரிசீலனை செய்து, யூனியன்களுக்கு அவசியமானபடி வழிகாட்டுவது; பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் வரிகள் மற்றும் பாக்கிகளைக் கிராம உத்தியோகஸ்தர்கள் வசூலிப்ப தற்கான முறைகளைத் திட்டம் செய்வதும், யூனியன்களுடை யவும் பஞ்சாயத்துகளுடையவும் கணக்கில் வரவு வைக்கும்படி தூண்டுவதும் அப்படிப்பட்ட டிமாண்டுகள், வசூல்களைச் சரி வரக் கண்காணிப்பதும் ; 112. உத்தரவுகள், நடவடிக்கைகளை மாற்றும் அதிகாரம் உண்டா? அரசாங்கம், எந்தச் சமயத்திலும் அல்லது கேட்டு வாங்கி நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு உத்தரவினுடைய தஸ்தா வேஜூ அல்லது பதிவு செய்யப்ப்ட்டிருக்கிற நடவடிக்கைகளைப் பரிசோதனை செய்யலாம். இவ்வாறு செய்வதற்கு சட்டத்தின் விதிகளில் இடம் உண்டு. இதை இன்ஸ்பெக்டர் lதுணை அபிவிருத்தி கமிஷனர் கல்ெக்ட்ர் அல்லது அதிகாரங்கள் டெலிகேட் செய்யப்பட்டிருக்கிற அதிகாரிகள், அல்லது வேறு