152 அத்தகையவர் கிராமத்திலாவது நகரத்திலாவது வசிக்கா மல் இருந்து, அவருடைய விலாசம் கமிஷனருக்குத் தெரியு மால்ை அதை ரிஜிஸ்தர் தபால் மூலம் அவருக்கு அனுப்புதல்; முன் கூறிய வழிகள் எதுவும் இல்லையாளுல், நோட்டீஸை அவருடைய இருப்பிடம் அல்லது அலுவலகம் உள்ள இடத்தில் நன்கு தெரியும் இடத்தில் ஒட்டுதல்; மேலே கூறியுள்ள உத்தரவுகளை தவருமல் கையாள வேண்டும் என்றும், மிகவும் சிரத்தை எடுத்தாகிலும் அம் மாதிரி கையாளாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஹைகோர்ட்டும் அரசாங்கமும் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. சம்பந்தப்பட்ட ஒரு வ ரு ைட ய வீட்டின் பலகையில் நோட்டீஸை ஒட்டுவது முற்றிலும் ஒழுங்கற்றது என்று ஹைகோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 115. வழக்குத் .ெ த டர் வ. த ற் கு அனுமதி வேண்டுமா ? சேர்மன் அல்லது வைஸ் சேர்மன் அல்லது கமிஷனர் தம் முடைய உத்தியோகக் கடமையைச் செய்வதில் ஏதாவது குற்றம் செய்திருக்கிருர் என்று குற்றம் சாட்டப்பட்ட பொழுது, அரசாங்கத்தின் முன்அனுமதியில்லாமல் எந்த நீதி ஸ்தலமும் குற்றம் செய்திருப்பதாக அங்கீகரிக்கக் கூடாது. அரசாங்கம் அனுமதி கொடுக்கும்பொழுது, சேர்மன் அல்லது வைஸ்சேர்மன் அல்லது கமிஷனர் வழக்கு முடிவடையும் வரையில் அவர் தம்முடைய கடமைகளைச் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கலாம். 145. நல்ல எண்ணத்தோடு செய்தவற்றிற்கு பாது காப்பு உண்டா ? சேர்மன், வைஸ்சேர்மன் அல்லது அலுவலகத்தின் உத்தி யோகஸ்தர் ஒருவர் சட்டத்தின்படி செய்த எந்த ஒரு செய் கைக்காக, சட்டப் பிரிவுகள், துணை விதிகள், அல்லது விதிகளின் படி நடந்து கொள்வதில் அசட்டையாக இருந்தார் என்ருவது, செய்யத் தவறினர் என்ருவது, குற்றம் சாட்டப்படும் பொழுது அந்தச் செய்கை நல்ல எண்ணத்துடன் செய்யப் பட்டிருக்குமானலும், அந்த அசட்டையாவது தவறுதலாவது நல்லெண்ணத்தால் நிகழ்ந்திருக்குமானலும் அவருக்கு எதி ராக ஏதாவது ஒரு வழக்கோ, சட்டரீதியான நடவடிக்கையோ
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/186
Appearance