உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்ட அபிவிருத்தி மன்றம் எப்படி இயங்குகிறது 1. ஜில்லா அபிவிருத்தி சபை எவ்வாறு அமைக்கப் படுகிறது ? அதனுடைய அதிகாரங்கள் எவை ? ( ஜில்லா பரிஷத் ’ என்ற பெயரில், அகில இந்திய ரீதியில் வழங்கப்படுகிறது. ®ಕಣ ஆங்கிலத்தில், 'டிஸ்டிரிக்ட் டெவலப்மெண்ட் கவுன்ஸில்' என்று சொல்லப்படும். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், மாவட்ட அபிவிருத்தி மன்றம்,’ என்றும், ஜில்லா அபிவிருத்தி சபை' என்றும் வழங்கி வருகின்றது) மாவட்ட அபிவிருத்தி மன்றங்களை அமைப்பது எப்படி என்ருல், அரசாங்கத்தார் விளம்பரம் செய்து, அதன்மூலம் அதில் குறிப்பிடக்கூடிய தேதியிலிருந்து, ஒவ் .ெ வா ரு மாவட்டத்துக்கும்; மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒன்றை அமைக்கச் செய்யலாம். அதற்குத் தனியாக நிர்வாக அலுவல் கள் எதுவும் கிடையாது. அது ஒரு சட்டபூர்வமான சபை. ஆனால், அதனுடைய அலுவல்கள் ஆலோசனை கூறுவதுதான். 2. மாவட்ட அ பி விரு த் தி மன்றத்தின் அங்கத் தினர்கள் யார்? பதவி காரணமாக ஜில்லா கலெக்டர் ; அந்தந்த ஜில்லா விலுள்ள பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் ; ஜில்லாவிலுள்ள சட்டசபை அங்கத்தினர்கள்; ஜில்லாவிலுள்ள பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களின் தலைவர்கள் ; ஜில்லாவிலுள்ள நகர சபைகளின் தலைவர்கள் : அபிவிருத்தி திட்டங்களை வகுத்து திறை வேற்றுவதில் தொடர்புள்ள அரசாங்க கெஜட் பதிவு பெற்ற அ தி கா ரி க ள் ஆகியோர் அங்கத்தினர்களாக இருப்பார்கள்.