உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 3. கூ ட் டு அங்கத்தினர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள சட்டப் பிரிவில் இடம் உண்டா? சேர்த்துக் கொள்ளலாம். 4. எத்தனை கூட்டு அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்? எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வது? எப்படிச் சேர்த்துக் கொள்வது ? மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டம், பிரிவு 9 (4) பிரகாரம், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் வருகிற விஷயங் களில் விசேஷ அறிவும், அனுபவமும் கொண்ட ஒருவர், அவர் மன்றத்தில் அங்கத்தினராக இல்லாத போதிலும்கூட அவரை நிலைக்குழு (ஸ்டாண்டிங் கமிட்டி) ஒன்றில் அங்கத்தினராக நியமிக்கலாம். அல்லது நிலைக்குழு ஒன்றின் அங்கத்தினராகச் சேவை செய்யுமாறு மாவட்ட அபிவிருத்தி மன்றமே அவரைக் கேட்டுக் கொள்ளலாம். ஆல்ை, அரசாங்கம் நியமிக்கிற அங்கத்தினர்கள் எண்ணிக்கை இரண்டுக்கு மேற் போகக்கூடாது. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தில் அங்கத்தினராக இல்லாமல், நிலைக்குழு ஒன்றில் அங்கத்தினர்களா யிருப்பவர் கள், நிலைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்து கலந்து கொள்ளவும் விவாதங்களில் ஈடுபடவும் உரிமை உள்ளவர்கள். ஆனால், அத்தகைய கூட்டங்களில் அவர்களுக்கு ஒட் அளிக்கும் உரிமை இல்லை. 5. மாவட்ட அபிவிருத்தி மன்றத்துக்கு நியமன அங்கத்தினர்கள் உண்டா ? பதவி காரணமான அங்கத்தினர்கள் இருக்கிருர்களா? உண்டு. அதாவது, நிலைக் குழு ஒவ்வொன்றிலும், மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர்களிலிருந்து அரசாங்கத்தார் நியமனம் செய்யும் கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள் இருப்பார்கள். ஆனல், அரசாங்கத்தார் ஒரே அதிகாரியை, ஒன்றுக்கு மேற்பட்ட நிலைக்குழுக்களுக்கும் நியமிக்கலாம். 5. நிர்வாகத்தினர் யார்? எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிரு.ர்கள் ? ஜில்லா கலெக்டர், தமது பதவிகாரணமாக, மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் தலைவராக இருப்பார். -