உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பஞ்சாயத்து தேர்தல் விதிகள் 1958-ம் ஆண்டு, தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தின் 14-வது பிரிவில் அளித்துள்ள அதிகாரங்களேக் கொண்டு, அரசாங்கத்தார், அடியில் கண்ட விதிகளைச் செய்துள்ளனர். (14-வது பிரிவு : 'பஞ்சாயத்தின் அங்கத்தினர்கள் இதற்கென வகுக்கப்பெற்ற விதமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்??) 1. சுருக்கமான பெயரும் விளக்கமும் இந்த விதிகள், கிராமப் பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தலே நடத்துவது பற்றிய 1964-ம் ஆண்டு விதிகள் என்று சொல்லப்படும். இந்த விதிகளிலே சொல்லப்படும் தேர்தல் அதிகாரி' என்பது, எலக்ஷன் அதாரிட்டி அல்லது இந்த விதிகளின்படி, தேர்தல் நடத்துவது சம்பந்தமான காரியத்தைச் செய்ய அல்லது அலுவலே நிறைவேற்ற எலக்ஷன் அதாரிட்டியால் அதிகாரம் கொடுக்கப்பெற்ற அல்லது நியமிக்கப் பெற்றவர் அல்லது அதிகாரி எனக் கருத வேண்டும். அங்கத்தினர்களின் தேர்தல், ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். 2. தேர்தல் அதிகாரியின் கடமைகள் பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தலே நடத்து வதற்காக தேர்தல் அதிகாரி ஏற்பாடுகளேச் செய்வார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அங்கத்தினர் பதவியில் தற்காலிக காலிஸ்தானம் ஏற்படும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அம்மாதிரி ஒவ்வொரு தற்காலிக ஸ்தானம் ஏற்படுவதைப் பற்றி பஞ்சாயத்து தலேவர், எலக்ஷன் அதாரிட்டிக்கு அறிவிக்க வேண்டும். பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தலுக்காக, தீர்மா னிக்கப்பட்ட தேதிக்கு பத்து நாட்களுக்குக் குறையாமல், முன்னதாகவே, தேர்தல் அதிகாரி, தமிழில் ஒரு அறிக்கை