4 யைத் தயாரித்து வெளியிட வேண்டும், அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவை குறிப்பிட்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபர்களின் ল’গষ্ঠা কেf #55555. தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வார்டுகள். ஒவ்வொரு வார்டிலும் தேர்தல் நடைபெறப் போகும் ஸ்தானங்களில் ஷெட்யூல்டு வகுப்பினர், மலே ஜாதியினருக்கு ஸ்தானங்கள் ஏதேனும் ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த எண்ணிக்கை. நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்யப்பட வேண்டிய தேதி, இடம், நேரம். நியமனச் சீட்டுகளேப் பெற்றுக்கொள்ள வேண்டிய உத்தியோகஸ்தர். நியமனச் சீட்டுகளேப் பரிசீலனேக்கு எடுத்துக் கொள்ளப் படும் தேதி, இடம், நேரம். ஒவ்வொரு வார்டிலுள்ள வாக்காளர்களின் வாக்குகளே ஏந்தத் தேதியில், எந்த இடத்தில், எந்த நேரத்தில் அளிக்க வேண்டும். மேற்படி அறிவிப்பை, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து காரியாலயத்திலும், தேர்தல் நடைபெறப் போகும் வார்டி லுள்ள முக்கியமான மூன்று இடங்களிலும் ஒட்டி வெளியிட வேண்டும். வார்டுகள் ஒவ்வொன்றிலும் தண்டோரா மூலம் மேற்படி அறிவிப்பை வெளியிடலாம். தேர்தல் தேதி அன்று நடவடிக்கைகள் ஆரம்பமா வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக, மறுபடியும் தண்டோரா மூலம் மேற்படி அறிவிப்பை வெளியிடலாம். 3. ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரி தேர்தல் தலைமை அதிகாரியானவர், வார்டுகள் சம்பந்த மாகவும், தேர்தல்களே நடத்துவதற்காகவும் ஒருவரையோ அல்லது பலரையோ நியமித்து அனுப்பலாம். அம்மாதிரி நியமனம் செய்யப்பட்டவர்கள், வாக்காளர்களின் கூட்டத் துக்கு தலைமை வகித்து, தேர்தல் நடவடிக்கைகளே நடத்த வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/200
Appearance