உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 4. ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியின் கடமைகள் ஒவ்வொரு ஒட்டுச் சாவடிக்கும் தலைமை வகிக்கும் அதிகாரியானவர், தேர்தல் நடைபெறும் இடத்தில், ஒழுங்கு நிலவச் செய்ய வேண்டும். தேர்தல் சரியானபடி நடை பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சமயத்தில், அனுமதிக்கப்படுகிற வாக்காளர்களின் எண்ணிக் கையை முறைப்படுத்த வேண்டும், கீழ்க் கண்டவர்களேத் தவிர, மற்றவர்களே, தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் : அபேட்சகர்களும் அவர் களு டைய ஏஜண்டுகளும் ; (அபேட்சகர், ஒரு ஏஜண்டை எழுத்து மூலமாக நியமனம் செய்வார்.) தேர்தல் அலுவல் புரியும் போலீஸ் அல்லது அரசாங்க ஊழியர்கள் ; வாக்காளருடன் வரும் கைக் குழந்தை ; ஒருவருடைய உதவி இல்லாமல், நடக்க முடியாத குருட்டு வாக்காளர் அல்லது பலவீனமான நோயாளி வாக்காளருடன் வருகிற நபர் ; வாக்காளர்களே அடையாளம் காட்டுவதில் தனக்கு உதவி புரிவதற்காக அல்லது வாக்கெடுப்பில் வேறுவழியில் உதவியாயிருப்பதற்காக ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரி யானவர் நியமிக்கக்கூடிய நபர்கள். 5. நியமனச் சீட்டை சமர்ப்பிப்பது தேர்தல் தேதிக்கு முதல் நாள், 2-வது விதியின்படி தேர்தல் அதிகாரியால்; அறிவிப்பில் குறிப்பிடக்கூடிய நேரத்தில் அபேட்சகர்களின் நியமனச் சீட்டு எழுத்து மூலமாகச் செய்து கொள்ளப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வார்டின் வாக்காளர் ஜாபிதாவில் பெயர் உள்ள இரண்டு வாக்காளர்களால், பிரேரேபிப்பவர், ஆமோ திப்பவர் என்ற முறையில், மேற்படி நியமனச் சீட்டில் கையொப்பமிட வேண்டும். அத்துடன், அபேட்சகர், தாம் தேர்தலுக்கு நிற்க சம்மதம் தெரிவிக்கும் வகையில் அதில் கையொப்பமிட வேண்டும். பிறகு, அபேட்சகர், அதை தேர்தல் தலைமை அதிகாரியிடம் நேரில் கொடுக்க வேண்டும்.