6 நேரில் கொடுக்க முடியாவிடில் கிராம அதிகாரிகளில் ஒருவர், மேற்படி நியமனச் சீட்டில் ஆத்தாட்சிக் கையொப்பமிட்டி ருக்க வேண்டும். அவ்வாறு பிரேரேபிக்கப்பட்டு ஆமோதிக் கப்பட்ட அபேட்சர்களின் பெயர்களே ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரி குறித்துக் கொள்ள வேண்டும். - அபேட்சகரானவர் எந்த வார்டில் நிற்கிருரோ அந்த வார்டின் வாக்காளராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லே. - ஒரு அபேட்சகர் தான் எழுதிக் கையொப்பமிட்ட அறி விப்பை, ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியிடம் சேர்ப்பித்து விட்டு, அபேட்சகராக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ளலாம் மேற்படி அபேட்சகர் தம்மை நியமனம் செய்யப்பட்ட தினத் தன்று இரவு 9 மணி வரையிலும், தேர்தல் தினத்தன்று கால் 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் அந்த அறிவிப்பைக் கொடுக்கலாம். 6. டெபாசிட் தொகை அபேட்சகர் ஒவ்வொருவரும் தனது நியமனத்தின் போது அல்லது அதற்கு முன்னரோ, ஒட்டுச் சாவடி, தலைமை அதிகாரியிடம் ஒரு தொகையை டெபாஸிட் செய்து வைக்க வேண்டும். அல்லது அதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். ஷெட்யூல்டு வகுப்பினருக்கும் மலே ஜாதியினருக்கும் டெபாஸிட் தொகை ரூபாய் ஐந்து. மற்ற வர்களுக்கு எல்லாம் ரூபாய் இருபது. தேர்தலுக்கு நிற்க விரும்பும் அபேட்சகர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக டெபாஸிட் தொகையைக் கட்ட வேண்டும். ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியானவர், கலெக்டர் தீர்மானிக்கக்கூடிய பாரத்தில், அபேட்சகர்களால் கட்டப் படும் டெபாஸிட் தொகைகளே குறித்து, கணக்கு வைத்துக் கொள்ளலாம். கீழ்க்கண்டபடி அவர் நடவடிக்கை மேற் கொள்ளலாம் : - எந்த அபேட்சகர்களின் நியமனச் சீட்டுகள் நிராகரிக் கப்படுகின்றனவோ அவர்களுடைய டெபாஸிட் தொகைகள்; தாமாக விலகுகிற அபேட்சகர்களின் டெபாஸிட் தொகைகள் இவற்றை, மேற்படி நபர்களுக்கோ அல்லது அவர்களுடைய அதிகாரம் பெற்ற நபர்களுக்கோ உடனே திருப்பிக் கொடுக் கப்படவேண்டும். -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/202
Appearance