உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 1 முதல் 8 வரை விதித்துள்ள நடைமுறை ஒதுக்கப்படாத ஸ்தானங்களே (பொது) பூர்த்தி செய்வதற்கு அனுசரிக்கப்பட ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியானவர் மீதியுள்ள ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களே பூர்த்தி செய்வதற்காக தேர்தலே நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 10. சின்னங்களை வழங்குதல் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியானவர், ஒரு வார்டி லுள்ள போட்டியிடும் ஒவ்வொரு அபேட்சகருக்கும் வாக் கெடுப்பு நடக்கும் தேதியன்று பிரத்தியேகமான சின்னம் ஒன்றை, அரசாங்கத்தார் பிறப்பிக்கக் கூடிய உத்திரவு களுக்கு உட்பட்டு வழங்க வேண்டும். 11. ஒட்டுச் சாவடிகளில் ஏற்பாடுகள் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஒட்டுச்சாவடி இருக்கவேண் டும். ஒவ்வொரு ஒட்டுச் சாவடியிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கெடுப்பு அறைகள் இருக்க வேண்டும். அந்த அறைகளில் வாக்காளர்கள், ஒருவர் மற்றவர்களுக்குத் தெரி யாமல் தங்கள் வாக்குகளே ரகசியமாகப் பதிவு செய்யலாம். தேர்தல் தலேமை அதிகாரியானவர், ஒரு ஒட்டுச் சாவ டிக்காக ஒதுக்கியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வாக்குப் பெட்டிகளே வைக்க ஏற்பாடு செய்ய வேண் டும். மேலும் வாக்காளர் ஜாபிதாவில் சம்பந்தப்பட்ட பகுதி யின் நகல்கள், வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டுகளில் பிரத்தியேக அடையாளக் குறிகள் போடுவதற்கான கருவி கள், வாக்காளர்கள் அடையாளம் இடுவதற்குத் தேவையான பொருள்கள், அவசியமாயிருக்கக்கூடிய இதர தாள்கள், பென்சில், பேன, பாரங்கள் ஆகியவற்றைப் போதிய அள வுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டைப் போட்டால், பெட்டியைத் திறந்தால் அல்லது அதை வெளியில் எடுக்க முடியாதபடி வாக்குப் பெட்டி அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஒட்டுச் சாவடியின் நுழைவாயிலிலும் கீழ்க் கண்டவற்றை நன்ருகத் தெரியும்படி காட்டி வைக்க