பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 ஜாபிதாவில் அந்த வாக்காளர் சம்பந்தப்பட்ட பதிவுகளே யொட்டி அவரது அடையாளம்பற்றி சந்தேகமின்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இது விஷயமாக ஆட்சேபனைகள் ஏதே னும் எழுப்பப்பட்டால் அதை அவர் கேட்டு முடிவு செய்ய வேண்டும். அவரது முடிவு இறுதியானது. ஒட்டுச்சாவடி தலைமை அலுவலர் ஒரு வாக்காளருக்கு வாக்குச் சீட்டை வழங்கும்போது, அந்த வாக்காளரது எண்ணுக்கு எதிரே வாக்காளர் ஜாபிதாவில் ஒரு அடையாளக் குறி போட வேண்டும். ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்குச் சீட்டு தான் கொடுக்கப்படும். வாக்காளர் அதைப் பெற்றுக் கொண்ட வுடன் வாக்களிக்கும் அறைக்குச் சென்று, அங்கே வைக்கப் பட்டுள்ள கருவியின் உதவியுடன் தாம் வாக்களிக்க விரும்பு கிற அபேட்சகரின் சின்னத்துக்கு எதிரில், வாக்குச் சீட்டில் அந்த அபேட்சகருடைய சின்னம் அச்சிடப்பட்டுள்ள அடைப் புக்குள் எங்கேயாவது அம்மாதிரி அடையாளம் இடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்களேத் தேர்ந்தெடுக்க வேண்டுமானல், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அபேட்சகர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல அடையாளங்கள் இட லாம். ஆனல் அபேட்சகருடைய சின்னத்துக்கு எதிரில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களைப் போடக் கூடாது. பிறகு அவர் அளிக்கும் வாக்கு ரகசியமாக இருக்கும் பொருட்டு, வாக்குச் சீட்டை மடித்து அதன் பின்புறம், முத்திரையிடப்பட்டுள்ள பிரத்தியேக அடையாளத்தை ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியிடம் காட்டிவிட்டு வாக்குப் பெட்டிக்குள் அதைப் போட வேண்டும். கால தாமதம் செய்யாமல் ஒவ்வொரு வாக்காளரும் வாக் களிக்க வேண்டும். வாக்கு அளித்தவுடனே அவர் ஒட்டுச் சாவடியைவிட்டு வெளியே சென்றுவிட வேண்டும். வாக்குச் சீட்டைத் தவிர வேறு எதையும் வாக்குப் பெட்டியில் போடக் கூடாது. வாக்குகளே எண்ணும்போது வாக்குச் சீட்டுகள் நீங்கலாக, வேறு ஏதேனும் பொருள்கள் இருந்தால் அவை பஞ்சாயத்துக்குப் பறிமுதலாகிவிடும், 14. பார்வையிழந்தவர், உடல் ஊனமுள்ளவர் வாக்கை பதிவுசெய்யும் முறை வயது முதிர்ந்த காரணத்தாலோ அல்லது கண் பார்வை இழந்துவிட்ட காரணத்தாலோ அல்லது உட்ல் ஊனம் கார