உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. "محب போலி வாக்குச் சீட்டாயிருத்தல் ; உண்மையான வாக்குச்சீட்டுத்தான என்று தெரிந்து கொள்ள முடியாமல் சேதம் அடைந்திருத்தல் அல்லது அழிக்கப்பட்டிருத்தல் ; குறிப்பிட்ட ஒரு ஒட்டுச் சாவடியில் பயன்படுத்த வேண் டும் என்று அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் வரிசை எண்கள் அல்லது வடிவமைப்பு அல்லாமல் வேறு வரிசை எண்கள் அல்லது வடிவமைப்பு உடையதா யிருத்தல் ; 12-வது விதியைச் சேர்ந்த துனே விதியின் பிரிவுகளுக் கேற்ப இருக்க வேண்டிய பிரத்தியேக அடையாளம் இல்ல்ா திருத்தல் ; ஆனால், மேலே இரண்டு பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ள, ஏதாவது ஒரு குறைபாடு, ஒட்டுச்சாவடி தலைமை அலுவலரின் தவறு அல்லது பிழை காரணமாக ஏற்பட்டது என்று தேர்தல் தலைமை அதிகாரி சந்தேகமில்லாமல் தெரிந்துகொண்டால், அந்தக் குறைபாடு காரணமாக மேற்படி வாக்குச் சீட்டை நிராகரிக்கக் கூடாது. மேலும் ஒரு வாக்குச் சீட்டில் அடையாளம் போட்டிருக் கும் முறையிலிருந்து குறிப்பிட்ட ஒரு அபேட்சகருக்கு வாக்கு அளிக்க உத்தேசித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தால் மேற்படிவாக்குச் சீட்டில் வாக்குப் பதிவு அடையாளம்,தெளி வாக இல்லே என்பதாலோ அல்லது பலதடவை அடையாள மிடப்பட்டுள்ளது என்பதாலோ மேற்படி வாக்குச் சீட்டை நிராகரிக்கக்கூடாது. - இந்த விதியின்கீழ் ஒட்டுச்சாவடியில் உபயோகிக்கம் பட்ட வாக்குப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு நிராகரிக்கப் பட்ட எல்லா வாக்குச் சீட்டுகளேயும் சேர்த்து ஒரே கட்டாகக் கட்ட வேண்டும். - தேர்தல் தலேமை அதிகாரியின் தீர்மானம் முடிவான தாகும். ஆல்ை, அது ஒரு தேர்தல் மனுவின்மீது நீதிமன்றத் தார் அளிக்கும் தீர்ப்புக்கு மட்டும் உட்பட்டதாகும். (முன்னர் சொல்லப்பட்ட காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக நிராகரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நீங்கலாக) வாக்குச் சீட்டுகளே எண்ணியபிறகு ஒட்டு சாவடி தலைமை அதிகாரி, கலெக்டர் விதிக்கும் முறையில் வாக்குகள் எண்ணியது. குறித்து பதிவேடு ஒன்றைத் தயாரிக்க