உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

发夺 23. கஷ்டங்களை நீக்குதல் அரசாங்கம், இந்த விதிகளே அமுலுக்குக் கொண்டுவரும் காரியத்திற்காக, அல்லது இந்தச் சட்டத்தின்படி ஒரு தேர்தலை நடத்தும் காரியத்திற்காக, அவசியம் எனக் கருதக் கூடிய பொது அல்லது விசேஷ கட்டளேகளேப் பிறப் விக்கலாம். இந்த விதிகளின் பிரிவுகளே அமுலுக்கு கொண்டு வருவதில் அல்லது ஏதாவது ஒரு தேர்தலே நடத்துவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அரசாங்கம், சந்தர்ப்பத்துக்கு அவசியமானபடி, அந்தச் சிரமத்தை நீக்குவதற்காக உத்திரவு பிறப்பித்து, தங்களுக்கு அவசியம் எனத் தோன்று கிற எதையும் செய்யலாம். மேற்படி உத்திரவின் நகல் ஒன்றை, அடுத்துக் கூடும் சட்டசபை-மேல் சபை முன்பு வைக்கவேண்டும். (G. O. No. 1986. R. D. L. A. 25-9-1964)