3} அல்லது தானகவே தான் அவசியம் எனக் கருதும் விசார னேயை சுருக்கமான முறையில் செய்த பிறகு கீழ்க்கண்ட காரணங்களில் எதை முன்னிட்டாவது அந்த நியமனத்தை நிராகரித்துவிடலாம், (அ) காலி ஸ்தானத்தை பூர்த்தி செய்ய அங்கத்தின் ராக தேர்ந்தெடுக்கப்பட அந்த அபேட்சகர் சட்டத்தின் பிரிவுகளில் எதன் கீழாகிலும் தகுதி உள்ளவர் அல்ல. (ஆ) (8)-வது (9)-வது விதியில் கண்டபடி எதை யேனும் அனுசரித்து நடக்கத் தவறியுள்ளார். (இ) நியமனச் சீட்டில் அபேட்சகர் அல்லது பிரேரேபிப் பவருடைய கையொப்பம் உண்மையானதல்ல. - (3) ஒரு அபேட்சகரின் நியமனச் சீட்டில் முறைப் பிசகு ஏதேனும் இருந்தாலும் அவர் மற்ருெரு நியமனச் சீட்டின் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டிருந்து அந்த நியமனச் சீட்டில் முறைப் பிசகு எதுவும் இல்லா திருந்தால் அவரது மற்ருெரு நியமனச் சீட்டில் பிசகு இருக்கும் காரணமாகவே அவருடைய நியமனச்சீட்டை நிராகரிப்பதற்கு துணைவிதி 2 (ஆ) அல்லது (இ) பகுதி களில் குறிப்பிட்டுள்ளது எதுவும் அதிகாரம் அளிப்பதாக கருதக்கூடாது. - (4) ஏதேனும் ஒரு நியமனச்சீட்டில் போதிய காரண மில்லாத சிறு தவறு ஏதாவது இருந்தால் அதற்காக தேர்தல் அதிகாரியானவர் அதை நிராகரிக்கக் கூடாது. விளக்கம் : இந்தத் துனே விதியின் காரியத்துக்காக ஒரு நியமனச்சீட்டில் அடையாளச் சின்னங்கள் சம்பந்தப் பட்ட உறுதிமொழியைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட ஒரு தவறும் முக்கியாம்சத்தில் ஏற்பட்ட ஒரு பிழையாக கருதப்பட மாட்டாது. - (5) பூர்த்தி செய்யவேண்டிய காலி ஸ்தானங்களில் அதிக எண்ணிக்கையுள்ள நியமனச் சீட்டுகளில் ஒரு நபர் பிரேரேபிப்பவர் என்ற முறையில் கையொப்பமிட்டிருந்தால், பூர்த்தி செய்யவேண்டிய காலி ஸ்தானங்களின் எண்ணிக் கையின் அளவு வரையில் முதலில் பெற்றுக்கொள்ளப்படும். நியமனச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும். அம்மாதிரியான நியமனச் சீட்டுகள் மற்றப்படி செல்லுபடியுள்ளவையாக இருக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/226
Appearance