உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அபேட்சகர்களிடையே இருந்து மேற்படி ஸ்தானங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். (2) (அ) தேர்தலுக்காக பூர்த்தி செய்ய வேண்டிய ரிசர்வ் ஸ்தானங்களின் ஒவ்வொரு வகைக்காகவும் தேர்தல் அதிகாரியானவர் நிலமையை தனித்தனியாக ஆலோசனை செய்ய வேண்டும். - (ஆ) () ரிசர்வ் ஸ்தானங்கள் சம்பந்தமாக காலி ஸ்தானங்களின் எண்ணிக்கையைவிட அபேட்சகர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாவிட்டால், தேர்தல் அதிகாரி சந்தர்ப்பத்துக் கேற்ப அந்த அபேட்சகர் அல்லது அம்மாதிரி யான எல்லா அபேட்சகர்களும் முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிப்பார். (ii) ரிசர்வ் ஸ்தானங்களுக்காக தேர்தலுக்கு நிற்கத் தகுதியுள்ள அபேட்சகர்களின் எண்ணிக்கையானது அந்த வகை காலி ஸ்தானங்களின் எண்ணிக்கைக்கு மேற்பட் டிருந்து, ஆல்ை, அந்த வார்டுக்கு நடக்கும் தேர்தலில் நிற்கும் அபேட்சகர்களின் மொத்த எண்ணிக்கையானது அந்தத் தேர்தலில் பூர்த்தி செய்யவேண்டிய காலி ஸ்தானங் களின் மொத்த எண்ணிக்கைக்குச் சமமாக இருந்தால், தேர்தல் அதிகாரி, சம்பந்தப்பட்ட அபேட்சகர்களுக்கு அறிவிப்பு கொடுத்த பிறகு, ரிசர்வ் ஸ்தானங்களுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டிய அபேட்ச கர்கள் யார் என்பதையும் பொது ஸ்தானங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பதையும் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்ய வேண்டும். ஆளுல், ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்கு நடக்கும் தேர்தலுக்கு நிற்கத் தகுதியுள்ள அபேட்சகர்கள் தங்க ளிடையே யிருந்து ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்கு யார் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கவேண்டும் என்பது குறித்து தங்களுக்குள் உடன்பாடு செய்துகொண்டு அதில் தாங்கள் கையொப்பமிட்டு அந்த அறிக்கை ஒன்றை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினுல் அவர் அவ்வாறே அறிவிப்பார். மேற்படி அபேட்சகர்கள், மேற்படி அறிக்கையை 12-வது விதியின் (1) துணை விதியின்படி ஓர் அபேட்சகர் தான் அபேட்சதராயிருப்புதினின்றும் விலகிக்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கால அளவு முடிவடையுமுன் அனுப்ப வேண்டும்.