35 (3) தேர்தலில் பூர்த்தி செய்ய வேண்டிய ஒதுக்கப் பட்ட ஸ்தானங்களில் உள்ள காலி ஸ்தானங்கள் (2) துணை விதியின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட அபேட்சகர்களே நீக்கிவிட்ட பின்னர் எஞ்சியுள்ள போட்டி யிடும் அபேட்சகர்களின் எண்ணிக்கை தேர்தலில் பூர்த்தி செய்ய வேண்டிய பொது ஸ்தானங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இல்லாவிட்டாலும், தேர்தல் அதிகாரி யானவர் அவர்களே பொது ஸ்தானங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பார். (4) துணை விதிகள் (2), (3)-ன்படி பூர்த்தி செய்யப் படாமல் உள்ள காலி ஸ்தானங்கள் சம்பந்தமாக, மேற்படி துணை விதிகளின்படி அறிவிக்கப்பட்டவர்களே நீக்கிய பிறகு எஞ்சியுள்ள அபேட்சகர்களிடையே இருந்து தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும். (5) துணை விதிகள் (2), (3), (4)ன்படி நிர்ணயித் துள்ள நடைமுறையை அனுசரித்த பிறகு பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஸ்தானங்கள் இருந்தால். புதிதாக தேர்தலுக்கு மேற்கொள்வதைப் போலவே தேர்தல் நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டும். 14. சின்னங்களே வழங்குதல் போட்டியிடும் அபேட்சகர்களின் பெயர்களே வெளி யிடுதல், (1) ஒரு அபேட்சகர் தான் அபேட்சகராக இருப்பத னின்றும் எந்தக் கால அளவுக்குள் விலகிக் கொள்ளலாமோ அந்தக் கால அளவு முடிவடைந்த பிறகு, வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று தெரிந்தால், தேர்தல் அதிகாரி யானவர் இது விஷயமாக, அரசாங்கம் பிறப்பிக்கக்கூடிய கட்டளைகளுக்குட்பட்டு, போட்டியிடும் ஒவ்வொரு அபேட்ச கருக்காக வெவ்வேருண சின்னத்தை வழங்கவேண்டும். (2) பிறகு, தேர்தல் அதிகாரியானவர் போட்டியிடும் எல்லா அபேட்சகர்களின் ஜாபிதா ஒன்றை 3-வது நமூணுப் படி தயாரித்து பஞ்சாயத்து காரியாலயத்தின் அறிவிப்புப் பல்கையிலும், தேர்தல் நடத்தப்பட வேண்டிய ஒவ்வொரு வார்டின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முக்கியமான இடங்களில் ஒட்டி வைக்க வேண்டும். - (3) போட்டியிடும் அபேட்சகர்களின் நியமனச் சீட்டு களில் விவரித்துள்ளபடி அவர்களுடைய பெயர்கள் அந்த ஜாபிதாவில் அகரவரிசைக் கிரமத்தில் இருக்க வேண்டும்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/230
Appearance