39 19. பெண் வாக்காளருக்கு வசதிகள் (1) ஆண், பெண் வாக்காளர்களுக்கான ஒரு ஒட்டு சாவடியில் அவர்களே மாறிமாறி தொகுதியாக உள்ளே விடும்படி ஒட்டுச் சாவடி அலுவலர் கட்டளையிடலாம். (2) ஒட்டுச் சாவடியில் பெண் வாக்காளர்களுக்கு உதவியாயிருப்பதற்கு தேர்தல் அதிகாரி அல்லது ஒட்டுச் சாவடி அலுவலர் பெண் ஒருவரை நியமிக்கலாம். பொதுவாக இவர் பெண் வாக்காளர் சம்பந்தமாக வாக்கெடுப்பு நடத்து வதில் ஒட்டுச் சாவடி அலுவலருக்கு உதவியாக இருப்பார். குறிப்பாக பெண் வாக்காளர்களேச் சோதனையிடுவதற்கு அவசியம் எற்பட்டால் அதற்கும் இவர் உதவி புரிவார். 20. வாக்காளர்களை அடையாளம் கண்டு பிடித்தல் (1) வாக்களிப்பதற்காக ஒருவர் ஒட்டுச் சாவடி அலுவலர் முன்வரும்போதும் வாக்குச் சீட்டை கொடுப்பதற்கு முன்பாகவும் ஒட்டுச் சாவடி அலுவலர் மேற்படி நபரை கீழ்க் கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை யுமே கேட்கலாம். (அ) கீழ்க்கண்டபடி பதிவு செய்யப் பெற்றவர் நீங்கள் தானு ? (வாக்காளர் ஜாபிதாவிலிருந்து அவர் சம்பந்தப்பட்ட முழு விவரத்தையும் படித்துக் காட்ட வேண்டும்) (ஆ) இப்போதைய தேர்தலுக்காக, இந்த ஒட்டுச் சாவடியிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு ஒட்டுச் சாவடியிலோ ஏற்கெனவே வாக்களித்துள்ளீர்களா? ஒரு நபரிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் தயக்க மின்றி பதில் அளித்தால்தான் அவருக்கு வாக்குச் சீட்டு கொடுக்கவேண்டும். முதல் கேள்விக்கு ஆம்’ என்றும் இரண்டாவது கேள்விக்கு 'இல்லே’ என்றும் அவர் பதில் சொல்லவேண்டும். இதில் சொல்லியபடிக்கல்லாமல் மற்றபடி, வாக்காளர் ஜாபிதாவில் பெயர் கண்டுள்ள நபர் ஒவ்வொரு வருக்கும் ஒரு வாக்குச் சீட்டு கொடுக்கவேண்டும். (2) ஒரு நபர் வாக்குச் சீட்டைப் பெற உரிமை உள்ளவரா என்பதை முடிவு செய்கையில், ஒட்டுச் சாவடி அலுவலர், வாக்காளர் ஜாபிதாவில் ஏதாவது பதிவு செய்யப் படுகையில் உள்ள எழுத்துப் பிழைகளையோ அச்சுப் பிழை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/234
Appearance