உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பிரத்தியேக அடையாளத்தை ஒட்டுச் சாவடி அலுவலரிடம் காண்பித்துவிட்டு வாக்குப் பெட்டிக்குள் அதைப் போட வேண்டும். (8) கால தாமதம் செய்யாமல் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டும். வாக்களித்தவுடன் ஓ ட் டு ச் சாவடியை விட்டு அவர் வெளியே சென்றுவிட வேண்டும். வாக்குச் சீட்டைத் தவிர வேறு எதையும் வாக்குப் பெட்டிக்குள் போடக்கூடாது. வாக்குகளே எண்ணும்போது வாக்குச் சீட்டுகள் நீங்கலாக வேறு பொருள்கள் இருந்தால் அவை பஞ்சாயத்துக்குப் பறிமுதலாகிவிடும். 24. தேர்தல் அலுவல் பார்க்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான நடைமுறை (1) ஒரு வார்டில் வாக்குப்பதிவு செய்யும் உரிமையுள்ள ஒரு வாக்காளர், சாதாரணமாக வரக்குப்பதிவு செய்வதற்கு உரிமை இல்லாத வேறு ஒரு ஒட்டுச் சாவடியில் தேர்தல் அலுவலுக்கு நியமிக்கப்பட்டு, அவர் அந்த வார்டிலே தனது வாக்கைப் பதிவு செய்ய விரும்பில்ை வாக்கெடுப்பு தேதிக்கு குறைந்தது ஏழு நாட்கள் முன்னர் அல்லது தேர்தல் அதிகாரி நிர்ணயிக்கக் கூடிய இன்னும் குறைந்த கால அளவில் வாக்குப்பதிவு செய்வதற்கு விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும், அந்த விண்ணப்ப மானது 5-வது நமூனப்படி இருக்கவேண்டும். விண்ணப்ப தாரர் அவரது வாக்கைப் பதிவு செய்ய உரிமை உள்ளவர் என தேர்தல் அதிகாரி சந்தேகமின்றி தெரிந்து கொண்டால் விண்ணப்பதாரர் எந்த ஒட்டுச்சாவடியில் .ே த ர் த ல் அலுவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளாரோ அந்த ஓட்டுச் சாவடியின் அலுவலருக்கு 5-வது நமூவிைல் உள்ளபடி சான்று இதழ் ஒன்றை அனுப்ப வேண்டும். அந்தச் சான்று இதழுடன் விண்ணப்பதாரர் வாக்களிக்க உரிமையுள்ள் வார்டின் வாக்குச் சீட்டையும் அனுப்பவேண்டும். தேர்தல் அதிகாரி, அந்த வாக்குச் சீட்டின் பின்புறத்தில் தேர்தல் அலுவலில் உள்ள வாக்காளர்” என்னும் முத்திரையைப் பதியவேண்டும். அவர் அம்மாதிரி வாக்குச் சீட்டை அனுப்பு முன் வாக்காளர் வாக்குப் பதிவு செய்ய உரிமையுள்ள ஒட்டுச் சாவடிக்கு சம்பந்தப்பட்டதும், அடையாளம் பெற்றதுமான வாக்காளர் ஜாபிதாவின் பிரதியில் அந்த வாக்காளர் சம்பந் தப்பட்ட பதிவுக்கு எதிரில், அந்த வாக்குச் சீட்டின் வரிசை எண்ணே குறித்துக் கொள்ள வேண்டும்.