50 அல்ல என்று கருதில்ை, அந்தத் தேர்தலே மேற்கொண்டும் நடத்துவதற்கும் அதை முடிப்பதற்கும் தாம் உசிதம் என்று கருதுகிற உத்திரவுகளே தேர்தல் அதிகாரிக்கு பிறப்பிக்க வேண்டும், (3) இந்த விதிகளின் பிரிவுகள் அல்லது அவற்றின் கீழ் செய்யப்பட்ட உத்திரவுகளின் பிரிவுகள், முதலில் நடந்த வாக்கெடுப்புக்குப் பயன்படுவது போலவே புதிய வாக்கெடுப் புக்கும் பயன்படும். 81. வாக்கெடுப்பை முடித்தல் (1) (அ) ஒட்டுச்சாவடி அலுவலர்_ சந்தர்ப்பத்திற் கேற்ப 7-வது விதியின் கீழ் அல்லது 29-வது விதியைச் சேர்ந்த (4) துணை விதியின் கீழ் அல்லது 30-வது விதியைச் சேர்ந்த (2) துணை விதியின் (அ) பகுதியின்படி நிச்சயிக்கப் பட்ட நேரத்தில், சாவடியை மூடிவிட வேண்டும். இந்த நேரத்துக்குப் பிறகு எந்த வாக்காளரையும் உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது. ஆனால், சாவடி மூடப்படும் முன் அங்கு வந்திருக்கும் வாக்காளர் அனேவரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். - (ஆ) யாராவது ஒரு வாக்காளர், சாவடி மூடப்படு வதற்கு முன் சாவடிக்குள் வந்திருந்தாரா என்பது பற்றிய பிரச்னை எழுந்தால், அதை ஒட்டுச் சாவடி அலுவலர் முடிவு செய்ய வேண்டும். அவரது முடிவு இறுதியானது. (2) (அ) வாக்கெடுப்பு முடிந்த பிறகு கூடிய விரைவில் ஒட்டுச் சாவடி அலுவலர் வாக்குப் புெட்டியின் துவாரத்தை மூடிவிட வேண்டும். அதை மூடுவதற்கு இயந்திர சாதனம் எதுவும் இல்லையென்ருல், அவர் மேற்படி துவாரத்தை முத்திரையிட்டு அங்கே வந்துள்ள போட்டியிடும் அபேட்சகர் அல்லது ஒட்டுச் சாவடி ஏஜண்ட் அதில் முத்திரையிடு வதற்கும் அனுமதிக்க வேண்டும். - (ஆ) முதல் வாக்குப்பெட்டி நிறைந்து விட்டதன் காரணமாக இரண்டாவது வாக்குப்பெட்டி ஒன்றை உடயோ கிக்கும் அவசியம் ஏற்பட்டால் முதல் பெட்டியை கூறி யுள்ளபடி, முத்திரையிட்ட பிறகுதான் மற்ருெரு வாக்குப் பெட்டியை உபயோகிக்கத் தொடங்கவேண்டும். z .
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/245
Appearance