உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 85. வாக்குச் சீட்டுகளை பரிசீலனை செய்தல், நிராகரித்தல் (1) 86-வது விதியின்படி நிராகரிக்கப்படக் கூடியவை என்று தேர்தல் அதிகாரி கருதும் வாக்குச் சீட்டுகள் அனைத்தையும், கைபடாமல் பார்வையிடுவதற்கு அபேட்சகர் களேயும் அவர்களது ஏஜண்டுகளையும் அனுமதிக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குச் சீட்டின் மீதும் ' R' என்னும் எழுத்தையும் நிராகரிப்பதற்கான காரணத்தை சுருக்கமாகவும் தனது சொந்தக் கையெழுத்தில் எழுத வேண்டும் அல்லது ரப்பர் ஸ்டாம்பினால் குத்த வேண்டும். (2) தேர்தல் அதிகாரியானவர் முடிந்தவரையில் வாக்குகளே தொடர்ந்து எண்ணிக்கொண்டு போகவேண்டும். வாக்கு எண்ணுவது அவசியமான ஒரு இடைவேளையில் நிறுத்த வேண்டியது வந்தால், வாக்குச் சீட்டுகள், உறைகள் தேர்தல் சம்பந்தமான எல்லா தஸ்தாவேஜுகளிலும் தேர்தல் அதிகாரியின் முத்திரை, தங்களுடைய முத்திரைகளே வைக்க விரும்பும் அபேட்சகர்கள் அல்லது ஏஜண்டுகளின் முத்திரை ஆகியவற்றை இட்டு, அவற்றின் பத்திரமான பாதுகாப்புக்கு போதுமான முறைகளேக் கையாள வேண்டும். (8) ஒட்டுச் சாவடி அலுவலர் 31 (5) விதியின்படி அனுப்பிய அறிக்கையை தேர்தல் அதிகாரியானவர் தம்மிடமுள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை, நிராகரிக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை, உபயோகிக்கப்படாத வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். - 38. வாக்குச் சீட்டுகளை நிராகரித்தல் (1) கீழ்க் காணும் காரணங்களினல் நிராகரிக்கப்படும். (அ) வாக்காளரை இன்னர் என்று தெரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு அடையாளம் அல்லது எழுத்து அதில் காணப்படுதல் ; - (ஆ) அதில் வாக்கு எதுவும் பதியப்படாதிருத்தல் ; • (இ) தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அபேட்சகர்களின் எண்ணிக்கை க்கு அதிகமான அபேட்சகர்களுக்கு வாக்குப் பதியப் பெற்றிருத்தல் ;