உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 (ஈ) அதில் உள்ள வாக்கைக் குறிக்கும் அடையாளம், எந்த அபேட்சகருக்கு வாக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சந்தேகப்படும்படி போட்டிருத்தல் ; (உ) அது ஒரு போலி வாக்குச் சீட்டாக இருத்தல்; (ஊ) அது உண்மையான வாக்குச் சீட்டுத்தான என்று தெரிந்துகொள்ள முடியாதபடி சேதம் அடைந்திருத்தல் அல்லது அழிக்கப்பட்டிருத்தல்; (எ) குறிப்பிட்ட ஒட்டுச் சாவடியில் பயன்படுத்த வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளின் வரிசை எண்கள் அல்லது வடிவ அமைப்பு கொண்டிருத்தல்; (ஏ) 22-வது விதியைச் சேர்ந்த (2) துணைவிதி பிரிவு துளுக்கேற்பு இருக்கவேண்டிய பிரத்தியேக அடையாளம் இல்லாதிருத்தல்; ஆல்ை, (எ) அல்லது (ஏ பகுதியில் குறிப்பிட்டுள்ளி ஏதாவது ஒரு குறைபாடு, ஒட்டுச் சாவடி அலுவலரின் தவறு அல்லது பிழை காரணமாக ஏற்பட்டது என்று தேர்தல் அதிகாரி சந்தேகமின்றி தெரிந்து கொண்டால், அந்தக் குறைபாடு காரணமாக மே ற் ப டி வாக்குச் சீட்டை நிராகரிக்கக் கூடாது. - மேலும், ஒரு வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டி ருக்கும் முறையிலிருந்து குறிப்பிட்ட ஒரு அபேட்சகருக்கு வாக்கு அளிக்க உத்தேசிக்கப் பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தால், மேற்படி வாக்குச் சீட்டில் வாக்குப் பதிவு அடையாளம் தெளிவாக இல்லை என்பதாலோ அல்லது பல தடவைகள் அடையாளம் இடப்பட்டுள்ளது என்பதாலோ அதை நிராகரித்துவிட கூடாது. (2) இந்த விதியின்படி ஒட்டுச் சாவடியில் உபயோகிக் கப்பட்ட வாக்குப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு, நிராகரிக் கப்பட்ட எல்லா வாக்குச் சீட்டுகளேயும் சேர்த்து ஒரே கட்டாகக் கட்டவேண்டும். (8) தேர்தல் அதிகாரியின் தீர்மானம் முடிவானதாகும், ஆல்ை, அது ஒரு தேர்தல் மனுவின்மீது நீதிமன்றத்தினர் அளிக்கும் தீர்ப்புக்கு மட்டும் உட்பட்டதாகும்.