பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 42. சில உறைகளைத் திறக்கக்கூடாது தேர்தல் அதிகாரியானவர் டெண்டர் செய்துள்ள வாக்குச் சீட்டுக்கள் அல்லது வாக்காளருக்கு வாக்குச் சீட்டைக் கொடுத்ததைத் தெரிவிக்கும் அடையாளமிட்ட வாக்காளர் ஜாபிதாவின் பிரதி ஆகியவை முத்திரையிடப் பட்ட உறைகளேத் திறக்கக் கூடாது. 48. வாக்குச் சீட்டுகளைப் பத்திரப்படுத்தி வைத்தல் (1) தேர்தல் முடிவுகளே அறிவித்தபிறகு வாக்குச் சீட்டு களின் எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகளானலும் நிராகரிக்கப் பட்டவை, யானுலும் அல்லது டெண்டர் செய்யப்பட்டவை யானுலும்-உறைகளேயும், 24-வது விதியின்படி கொடுக்கப் பட்ட சான்று இதழ்களுடன் கூடிய முத்திரையிட்ட உறை களேயும், வாக்குச்சீட்டை வாக்காளருக்கு கொடுத்ததை அறிவிக்கும் அடையாளம் இட்ட வாக்காளர் ஜாபிதாவின் பிரதியையும் தேர்தல் அதிகாரியானவர் தம்முடைய பாது காப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த உறைகளே தேர்தல் மன்றம் அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் உத்தர வின்றி மற்றபடி திறக்கவோ, பார்க்கவோ கொடுக்கவோ கூடாது. (2) மேலே கூறப்பட்டவை எல்லாவற்றையும் ஆறு மாத காலம், தேர்தல் அதிகாரி தம்மிடம் வைத்துக் கொள்ள் வேண்டும். ஏதாவது ஒரு தேர்தல் மன்றம் அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தினர் கட்டளையிட்டாலன்றி மற்றபடி அவற்றை அழித்துவிடச் செய்துவிடலாம். 44. வெற்றிபெற்ற அபேட்சகர்களின் பெயர்களே வெளியிடுதல் கிரமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்களின் பெயர்களே தாமதமின்றி தே ர் த ல் அதிகாரியானவர் எலக்ஷன் அத்தாரிட்டிக்கு அனுப்ப வேண்டும். மேலும் அதன் நகல் ஒன்றை அரசாங்க கெஜட்டில் வெளியிடு வதற்காக, அரசாங்க அச்சக டைரக்டருக்கு அனுப்பு வேண்டும். பஞ்சாயத்துக் காரியாலய அறிவிப்புப் பல்கை யிலும் அதை வெளியிட வேண்டும்.