பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 (அ) X குறி போடப்படாத வாக்குச் சீட்டுகள். (ஆ) ஒ ன் று க்கு மேற்பட்ட அபேட்சகர்களுக்கு x குறியிடப்பட்டுள்ளவை அல்லது எந்த அபேட்சக ருக்கு"வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் தோன் றும்படி x குறியிட்டுள்ள வாக்குச் சீட்டுகள். (இ) ஒரு அபேட்சகரின் பெயருக்கு எதிரில் x குறியும் மற்றும் ஏதாவது ஒரு குறியும் இடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் w (ஈ) வாக்கைப் பதிவு செய்த அங்கத்தினர் இன்ஞர் என்று கண்டு கொள்ளும் வகையில் அடையாளம் காணப் படும் வாக்கு சீட்டுகள். 17. போட்டியிடும் அபேட்சகர்களில் அதிகப்படியான வாக்குகளேப் பெற்றுள்ள அபேட்சகர் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என அறிவிக்க வேண்டும். போட்டியிடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அபேட்சகர்களுக்கு சமமான் எண்ணிக்கையுள்ள வாக்குகள் இருந்து, மேற்படி அபேட் சகர்களில் யாருக்காவது ஒருவருக்கு ஒரு வாக்கு அதிகமாக இருந்தால், அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் என அறிவிக்கப் படுவார். அங்கத்தினர்கள் முன்னிலேயில், கூட் டத் தலைவர் சீட்டுக் குலுக்கல் முறையில் அபேட்சகர்களில் ஒருவருக்கு அதிகப்படி ஒரு வாக்குச் சேரும் வகையில் தீர்மானிக்க வேண்டும். 18. கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத் தலைவர் உடனடியாக கீழ்க்கண்டவற்றைச் செய்ய வேண்டும். (அ) கூட்டத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்பு ஒனறைத தயாரித்து, அதில் கையொப்பமிட வேண்டும். அதில் செய்துள்ள ஒவ்வொரு திருத்தத்தின் அடியிலும் அவர் தம்முடைய சுருக்கக் கையொப்பமிட வேண்டும். மேலும், கூட்டத்திற்கு வந்துள்ள அங்கத்தினர் யாரேனும் மேற்படி குறிப்பில் தசமும் கையொப்பமிட விரும்பில்ை அவரை அனுமதிக்க வேண்டும்.