பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 (ஆ) தேர்தல் முடிவுபற்றிய அறிக்கையை கலெக்ட குக்கும் மற்றும் தொடர்புள்ள அலுவலர் அல்லது அதிகாரிக் கும் அரசாங்கத்தின் பொது அல்லது விசேஷ உத்திரவின் மூலம் தீர்மானித்தபடி அனுப்ப வேண்டும். (இ) பஞ்சாயத்து காரியாலய அறிவிப்புப் பலகை யில் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்: அதில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, தலைவர் அல்லது துணேத் வர் பெயர் குறிப்பிட வேண்டும். அதில் தலேவர் கை யொப்பமிட வேண்டும். தவிர, அரசாங்கம் பொது அல்லது விசேஷ உத்தரவு மூலம் தீர்மானிக்கக்கூடிய முறையில் விளம்பரம் ஒன்றையும் வெளியிட வேண்டும். 19. (1) பின்னர், கூட்டத் தலைவர், வாக்குச் சீட்டு களே எல்லாம் தனியாகக் கட்டி உறையினுள் போட்டு அதில் முத்திரை இடவேண்டும். அதில் உள்ள சீட்டுகளேப் பற்றிய விவரங்களேயும், அது எந்தத் தேர்தல் பற்றியது, எந்தத் தேதியில் நடந்தது, என்பது பற்றியும் குறித்து வைக்க வேண்டும். (2) மேற்படி உறைகளே தேர்தல் நீதிமன்றம் உத்திர விட்டாலன்றி, திறக்கவோ அதனுள் இருக்கும் சீட்டுகளை பார்வையிடவோ, கொண்டுவந்து காட்டவோ கூடாது. (3) மேற்படி உறைகளே அந்தப் பஞ்சாயத்து இருக்கிற பஞ்சாயத்து யூனியன் காரியாலயத்தில் ஒரு வருஷத்துக்கு பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு, தகுந்த நீதிமன்றம் மற்ற விதமாக உத்தரவிட்டாலன்றி, மற்றபடி அவற்றை அழித்துவிட வேண்டும். 20. மேற்கண்ட விதிகளின்படி, எந்தத் தேர்தலே யாவது நடத்துவதில் சிரமம் ஏதாவது ஏற்பட்டால், தேர் தலை நடத்தத் தேவையானதென்று அரசாங்கம் கருதும் எந்த உத்தரவின் மூலமாவது, மேற்படி விதிகளுக்குத் தொடர்பு இல்லாத வகையில் ஏதேனும் செய்யலாம்.