பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மன், வைஸ்சேர்மனே தேர்ந்தெடுப்பது எப்படி ? (1) இந்த விதிகள் 1960-ம் ஆண்டு, சென்ன்ை பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்கள் (தலைவர், துணேத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது) விதிகள் எனப்படும். (2) தலைவர், துணைத் தலைவரின் தேர்தல், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் காரியாலயத்தில், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்களால், அந்த விஷயத்திற்காக விசேஷமாகக் கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றில் நடத்தப்பட வேண்டும். (3) [1] பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் தேர்தலுக்கான கூட்டம், காலி ஸ்தானம் ஏற்பட்ட பிறகு கூடிய விரைவில் (அ) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் புதிதாக அமைக் கப்பட்டிருந்தால் அல்லது சாதாரண காலிஸ்தானத்தை பூர்த்தி செய்வதற்கு தேர்தல் நடைபெற இருந்தால், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரியால் கூட்டப்பட வேண்டும். (ஆ) மற்ற எல்லா விஷயங்களிலும் துணைத் தலைவர் கூட்ட வேண்டும். துணைத் தலைவர் பதவியில் ஒரு காலி ஸ்தானம் ஏற்பட்டிருந்தால் அல்லது அவருடைய அதிகார எல்லேயில் 15 தினங்களுக்கு மேல் தொடர்ந்து இல்லா விட்டால் அல்லது அவர் வேலைசெய்ய இயலாதவராகி விட்டால், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி அந்தக் கூட்டத் தைக் கூட்ட வேண்டும். (2) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் துணேத் தலேவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், காலிஸ்தானம் ஏற்பட்ட பிறகு, கூடியவரை விரைவாகத் தலைவரால் கூட்டப்பட வேண்டும். (3) கூட்டம் நடைபெறும் தேதிக்கு குறைந்த பகஷம், ஏழு நாட்களுக்கு முன்பாகக் கூட்டம் நடைபெறும் தேதி, நேரம் இவற்றை அறிவிக்க வேண்டும்.