உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. பல வகையான வாக்குச் சீட்டுகளே பயன்படுத்துவது வாக்கெடுப்பின் ரகசியத் தன்மைக்கு முரணுனதாகும். 14. (1) படிப்பு இல்லாத காரணத்தாலோ, கண் தெரியாத காரணத்தாலோ அல்லது அங்க ஹரீனம் காரண மாகவோ அங்கத்தினர் ஒருவர், வாக்குச் சீட்டில் எழுதி யிருப்பதை படிக்க முடியாமலும், வாக்குச் சீட்டில் குறியின் இயலாமல் இருந்து, தமது வாக்கைப் பதிவதற்கு உதவி வேண்டினல், கூட்டத் தலைவர், அந்த அங்கத்தினரின் விருப்பப்படி, அவருடைய வாக்குச் சீட்டில் குறியிட்டு அந்தக் குறி வெளியே தெரியாதபடி அதை மடிக்க வேண்டும். (2) பிறகு, மேற்படி அங்கத்தினர் தாமாகவோ அல்லது கூட்டத் தலைவர் உதவியுடனே வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டிக்குள் போட வேண்டும். (3) கூட்டத் தலேவர், இந்த விதியின் கீழ் செயலாற்றும் போது, மேற்படி அங்கத்தினர் யாருக்கு வாக்களித்தார் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். மேற்படி விஷயங்களைப் பற்றி கூட்டத் தலைவர் சுருக்கமாக எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால், மேற்படி குறிப்பில், அந்த அங்கத்தினர் எந்த அபேட்சகருக்கு வாக்கு அளித்தார் என்பது பற்றி எழுதி வைக்கக் கூடாது. 15. அங்கத்தினர்கள் வாக்களித்து முடிந்ததும் கூட்டத் தலைவர் வாக்குப்பெட்டியை, அங்கே இருக்கும் அங்கத்தினர் களின் முன்னிலேயில் திறந்து, அதிலிருக்கும் வாக்குச் சீட்டுகளே வெளியே எடுத்து, ஒவ்வொரு அபேட்சகருக்கும் கிடைத்த வாக்குகளேக் குறித்து வைக்க வேண்டும். 16. கீழ்க்காணும் விஷயங்கள் காரணமாக வாக்குச் சீட்டுகள் செல்லாமல் போய்விடும். (அ) X குறி யிடப்படாத வாக்குச் சீட்டுகள் ; (ஆ) ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்களுக்கு X குறி யிடப்பட்டுள்ளவை. அல்லது எந்த அபேட்சகருக்கு வாக் களிக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேக்ம் தோன்றும்படி X குறியிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள். (இ) ஒரு அபேட்சகரின் பெயருக்கு எதிரில் x குறியும் மற்றும் ஏதாவது ஒரு குறியும் இடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள்,