95 யார் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளேப் பெற் றுள்ளார் என்பதை தீர்மானிக்க வேண்டுமானல், கூட்டத் தலேவர் அங்கத்தினர்களின் முன்னிலையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பார்த்து முதலில் யாருடைய பெயர் வருகிறதோ அந்த அபேட்சகரே இரண்டாவதாக அதிகப்படியான வாக்குகளேப் பெற்றிருப்பதாகக் கொள்ள வேண்டும். இரண் டாவது வாக்கெடுப்பை நடத்துவது, அதன் முடிவை அறிவிப்பது முதலியவற்றை மேற் சொல்லிய (1) துனே விதியின்படி நடத்த வேண்டும். 18. கூட்டம் முடிந்த பின்னர் உடனடியாக தலைவர் கீழ்க் கண்டவற்றைச் செய்ய வேண்டும். (அ) கூட்டத்தின் நடவடிக்கைகள் பற்றிய குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் கையொப்பமிட வேண்டும். அதில் திருத்தங்கள் செய்திருந்தால் ஒவ்வொரு திருத்தத்தின் அடியிலும் அவர் தம்முடைய சுருக்க கையொப்ப மிட வேண்டும். மேலும், கூட்டத்திற்கு வந்துள்ள அங்கத்தினர் யாரேனும் மேற்படி குறிப்பில் தாமும் கையொப்பமிட விரும்பில்ை அவரை அனுமதிக்க வேண்டும். (ஆ) தேர்தல் முடிவுபற்றிய அறிக்கையை இன்ஸ்பெக்டி ருக்கும் அரசாங்கம் பொது அல்லது விசேஷ உத்திரவில்ை தீர்மானிக்கக் கூடிய இதர அதிகாரி அல்லது அதிகார சபைக்கும் அனுப்ப வேண்டும். (இ) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் காரியாலய அறிவிப்பு பலகையில் ஒர் அறிவிப்பை வெளியிட வேண்டும். அந்த அறிவிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் பெயர் குறிப்பிட வேண்டும் ; மேலும் கூட்டத் தலைவர் அதில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதோடு, அரசாங்கம் பொது அல்லது விசேஷ உத்திரவு மூலம் தீர்மா னிக்கக் கூடிய முறையில் விளம்பரம் ஒன்றையும் வெளியிட வேண்டும். 19. (1) பிறகு, கூட்டத் தலேவர், வாக்குச் சீட்டுகளே எல்லாம் தனியாகக் கட்டி, உறையினுள் போட்டு அதில் முத்திரையிட வேண்டும். அதில் உள்ள சீட்டுகளேப் பற்றிய விவரங்களேயும், அது எந்தத் தேர்தல் பற்றியது, எந்தத் தேதியில் நடந்தது, என்பதைக் குறித்து வைக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/288
Appearance