#03 11. வாக்காள்ர் வாக்குச் சீட்டைப் பெற்றவுடன் வாக் களிப்பதற்காக, அறைக்குள் சென்று, தாம் வாக்களிக்க விரும்பும் அபேட்சகரின் பெயருக்கு எதிரில் வாக்குச் சீட்டில் 'X' என்னும் குறியைப் போட வேண்டும். வாக்கெடுப்பு அறையைவிட்டு வருமுன்னர் வாக்குச் சீட்டை மடித்து, தேர்தல் அலுவலரின் முன்னுள்ள வாக்குப் பெட்டியில் போட் வேண்டும். - 12. வாக்களிப்பது ரகசியமான முறையில் நடைபெறு வதற்கு தேவையான ஏற்பாடுகளே தேர்தல் அலுவலர் செய்ய வேண்டும். ஏற்கனவே வாக்களித்தவர்கள், அடுத்து வாக் களிக்கப் போகிறவர்களிடம் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 18. (1) எழுத்தறிவு இல்லாமையாலோ அல்லது உடல் நிலே காரணமாகவோ ஒரு வாக்காளர், வாக்குச் சீட்டைப் படித்து அதில் குறியிட் இயலாமல் தமக்கு உதவி கோரி விண்ணப்பித்துக் கொண்டால், வாக்காளரின் விருப்பத்திற் கேற்ப தேர்தல் அலுவலர், வாக்குச் சீட்டில் பதிவு செய்து, வெளியில் தெரியாமல் அன்த மடிக்க வேண்டும். ... . . (2) பின்னர், வாக்காளர் தாம்ாகவோ அல்ல்து தேர்தல் அலுவலரின் உதவியுடனே வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டியில் போட் வேண்டும். (3) இந்த விதியின்படி, செயலாற்றும்போது தேர்தல் அலுவலர் கூடியமட்டில் ரகசியமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மாதிரியான விஷயம் ஒவ்வொன்றிற்கும் சிறு குறிப்பு ஒன்று எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஆல்ை, அதில் எந்த முறையில் யாருக்கு வாக்கு அளிக்கப் பட்டது என்பதை குறிப்பிடக்கூடாது. 14. வாக்காளர்கள், வாக்களித்த பின்னர், வந்தி ருக்கும் வாக்காளர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வாக்குப்பெட்டியை திறந்து, அதிலிருந்து வாக்குச் சீட்டுகளே எடுத்து, ஒவ்வொரு அபேட்சகருக்கும் கிடைத்த வாக்கு களின் எண்ணிக்கையை பதிவு செய்து கொள்ள வேண்டும். 15. வாக்குச் சீட்டில்(அ) 'X' என்னும் குறி இல்லாவிட்டால் அது செல்லாது. ( ஒரு அபேட்சகருக்கு மேற்பட்ட பெயர்களுக்கு எதிரில் 'X' குறி போட்டிருந்தால் அல்லது எந்த அபேட்ச
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/295
Appearance