|08 (1) கட்டிடம்’ என்பது வீடு; வீட்டைச்சார்ந்த வெளிப்புற வீடு, கூடாரம், லாயம், கக்கூஸ், கொட்டகை, குடிசை, சுவர் (எட்டு அடி உயரத்துக்கு மேற்படாத எல்லேச் சுவர். நீங்கலாக) முதலிய எல்லாவற்றையும் குறிக் கும். செங்கல், மண், மரம், உலோகம் அல்லது வேறு எந்தப் பொருளேக் கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் சரியே, அது கட்டிடம்தான். (2) தற்செயலாக ஏற்படும் காலி ஸ்தானம்’ என்ருல், முறைப்படி முடிய வேண்டிய காலவரைக்கு முன்னதாகவே ஏற்படும் காலி ஸ்தானம் என்று பொருள். தற்செயலான தேர்தல்’ என்பது தற்செயலாக ஏற்படும் காலி ஸ்தானத். துக்கு நடைபெறும் தேர்தலேயே குறிக்கும். (8) சேர்மன்’ என்ருல்; பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் தலைவர் என்பதைக் குறிக்கும். (4) கலெக்டர்’ என்ருல் பிரஸ்தாப ரெவின்யு ஜில்லா வின் கலெக்டரைக் குறிக்கும். - (5) கமிஷனர் என்ருல் பஞ்சாயத்து யூனியன் கமிஷனரைக் குறிக்கும். (6) கம்பெனி என்பது 1956-ம் வருஷத்திய கம்பெனி களின் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு கம்பெனியையே குறிக்கும். (மத்திய அரசாங்க சட்டம் 1, 1956). மேற்படி சட்டத்தின் 591-வது பிரிவுக்கு உட்பட்ட ஒர் அந்நியக் கம்பெனியும் இதனுள் அடங்கும். (7) ஜில்லா என்பது 1958-ம் வருஷத்திய சென்னே ஜில்லா அபிவிருத்தி கவுன்ஸில்களின் சட்டம் 3-வது. பிரிவின் 1-வது உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட ஒரு ரெவின்யூ ஜில்லாவைக் குறிக்கும். அதே சட்டத்தின் 3-வது உட் பிரிவுப்படி வெளியிடப்பட்ட அறிக்கையை ஒட்டி திருத்தப் பட்ட முறையில் 2-வது உட்பிரிவின்படி அமைக்கப்பட்ட ஜில்லாவும் இதில் அடங்கும். - (8) ஜில்லா அபிவிருத்தி கவுன்ஸில்’ என்பது 1958-ம் வருஷத்திய சென்னை ஜில்லா அபிவிருத்தி கவுன்ஸில் சட்டத் தின்படி அமைக்கப்பட்ட, ஜில்லா அபிவிருத்தி கவுன்லில் கன்யே குறிக்கும். (இதை மாவட்ட அபிவிருத்தி மன்றம் ‘ன்றம் கூறலாம்.;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/299
Appearance