பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 (9) தேர்தல் அதிகாரி என்பவர் தேர்தலே நடத்து வதற்கு என நியமிக்கப்பெறும் ஒருவராவர். இவர் பஞ்சாயத் துத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ, அங்கத்தின ராகவோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவ ராகவோ துணைத் தலைவராகவோ அங்கத்தினராகவோ இருத்தலாகாது. - (10) நிர்வாக அதிகாரி என்ருல் பட்டணப் பஞ்சாயத் தின் பொறுப்புள்ள நிர்வாக உத்தியோகஸ் தரைக் குறிக்கும். நிர்வாக உத்தியோகஸ்தர் இல்லாத கிராமப் பஞ்சாயத்து களில் அதன் தலைவரைக் குறிக்கும். ஏன் என்ருல், அத் தலைவரே அப்பொறுப்பை ஏற்றிருக்கிருர், (11) ‘நிர்வாக உத்தியோகஸ்தர்’ என்பது பட்டனப் பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரியையே குறிக்கும். (12) அரசாங்கம்’ என்ருல் ராஜ்ய சர்க்கார்; அதாவது ராஜ்ய அரசாங்கம். (13) வீடு' என்பது பொதுவழியில் உள்ளதும், பிரத்ான வாசல்கொண்டதும், மனிதர்கள் வசிக்கவோ, இருக்கவோ தகுதி யுடையதும் ஆகிய ஒரு கட்டிடத்தைக் குறிக்கும், கடை, தொழில் செய்யுமிடம், கிடங்கு, மோட்டார் அல்லது பஸ்களே நிறுத்தி வைக்கும் இடம் இவை எல்லாம் இதனுள் அடங்கும். (14) குடிசை” என்பது, பெரும்பாலும் மரம், மண், இலைகள், வைக்கோல், கீற்று இவற்ருல் ஆன எந்தக் கட்டி டத்தையும் குறிக்கும். வேறு எவ்விதமான தற்காலிகக் கட்டி டங்களேயும் இந்தச் சட்டப்படி குடிசை என்று பஞ்சாயத்து அறிவிப்புச் செய்யலாம். - (15) இன்ஸ்பெக்டர் என்பவர், இந்தச் சட்டப்படி உள்ள அதிகாரங்களேயும் கடமைகளேயும் நிறைவேற்று வதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அதிகாரியாவர். (16) கக்கூஸ்’ என்பது மல ஜலம் கழிக்கும் இடம். சிறுநீர் கழிக்கும் இடமும் இதனுள் அடங்கும். (17) அங்கத்தினர்’ என்பவர் பஞ்சாயத்து அங்கத் தினர்; அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத் தினராகவும் இருக்கலாம். கூட்டு அங்கத்தினர்களும் (Co. opted) இதில் சேர்ந்தவர்கள்.