பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {{} (18) சாதாரண காலி ஸ்தானம்’ என்பது முறைப்படி காலவரையுடன் முடிந்து காலியாக இருக்கும் ஸ்தானமாகும். (19) சாதாரண தேர்தல்’ என்பது அவ்விதம் காலியான ஸ்தானத்திற்கு நடைபெறும் தேர்தல் என்பதாகும். (a) சொந்தக்காரர் என்பவர் ஓர் உடைமையின் வாடகையையோ, லாபத்தையோ தமக்காக வசூல் செய்து கொள்ளும் உரிமை உள்ளவர்; வேருெருவருக்காக ஏஜண் டாக இருந்தாலும் சரி, நிர்வாகியாக இருந்தாலும் சரி, கார்டியனுக இருந்தாலும் சரி, அவரும் சொந்தக்காரரே, மத சம்மந்தமான சொத்துக்கள், தர்ம ஸ்தாபன சொத்துக்கள் ஆகிய வற்றிற்கான டிரஸ்டிகளும் இதில் அடங்குவர். (b) மாடு, குதிரை போன்ற பிராணிகளின் சொந்தக் காரர் என்ருல் அவற்றை வைத்துக் கொண்டிருப்பவர் என்று பொருள். மாட்டு வண்டியின் சொந்தக்காரர், குதிரை வண்டியின் சொந்தக்காரர் என்ருல் மேற்படி வண்டிகளே வைத்திருப்பவர் என்று பொருள் (20) பஞ்சாயத்து’ என்பது ஒரு கிராமம் அல்லது பட்ட ணத்தின் நிர்வாகத்திற்காக இந்தச் சட்டத்தின்படி அமைக் கப்படும் சபையைக் குறிக்கும். (21) பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி என்பது இவ்வாறு குறிக்கப்பட்டு, அரசாங்கத்தாரால் அப்போதைக் கப்போது அறிவிக்கப்படும் தொகுதியாகும், (22) பஞ்சாயத்துப் பட்டணம் (இதை நகரப் பஞ்சா யத்து என்றும் சொல்லலாம்) என்பது இவ்வாறு வரை யறுக்கப்பட்டதொரு பஞ்சாயத்துப் பட்டணத்தின் அதிகாரத் துக்கு உட்பட்ட பிரதேசத்தையே குறிக்கும். . (23) பஞ்சாயத்து யூனியன் என்பது இந்த சட்டத் தின்படி இவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதியையே குறிக்கும். (24) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்” என்பது பஞ்சாயத்து யூனியனே நிர்வகிப்பதற்காக இந்த சட்டத்தின் படி அமைக்கப்பட்ட சபையைக் குறிக்கும். - (25) பஞ்சாயத்து கிராமம்’ என்பது ஒரு கிராமப் பஞ்சாயத்தின் அதிகார எல்லேக்கு உட்பட்ட பகுதியாகும். (26) தலைவர் என்பது பஞ்சாயத்துத் தலைவரைக் குறிக்கும்.