உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 வசிப்பவரோ ஆட்சேபித்து, அரசாங்கத்துக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அப்பீல் செய்து கொள்ளலாம். (4) இன்ஸ்பெக்டர், கீழ்க்கண்ட விஷயங்களில் தகுதி யான முறையில் உத்தரவுகளே பிறப்பிக்கலாம் : (a) செயல்படாமல் ஸ்தம்பித்துப்போன ஒரு பஞ்சாயத் தின் சொத்தை பைசல் செய்வது பற்றியும் அதன் கடன்கள்ே தீர்ப்பது பற்றியும், (b) ஒரு பஞ்சாயத்தானது ஏதாவது ஒரு பகுதியில் அதிகாரம் செலுத்துவதை நிறுத்திவிட்ட பிறகு, அப்பகுதியில் அந்த பஞ்சாயத்துக்கு உரிய சொத்தை பைசல் செய்வது பற்றியும் கடன்களே தீர்ப்பது பற்றியும், இன்ஸ்பெக்டர் தகுதியான உத்தரவுகளே பிறப்பிக்கலாம். - அவ்விதம் உத்தரவு பிறப்பிக்கும்போது, அதில் என்ன என்ன ஷரத்துக்கள் துணேயாக, சார்பாக அவசியமோ அவ்வளவையும் குறிப்பிடலாம். (i) ஒரு பஞ்சாயத்துக்கு சேர வேண்டிய வரி, கட்ட ணங்கள் முதலியவற்றை அல்லது செயல்படாமல் நின்று போன ஒரு பஞ்சாயத்திலிருந்து வர வேண்டிய வரி, கட்ட ணங்கள் முதலியவற்றை மேற்படி உத்தரவில் குறிப்பிடப் படுகிற அதிகாரியிடம் செலுத்த வேண்டும். மேலும், (ii) ஒரு பஞ்சாயத்து, செயல்படாமல் நின்றுபோன தேதியில், அது சம்பந்தமான பைசலாகாத அப்பீல்கள், விண்ணப்பங்கள் ஆகியவற்றை மேற்படி உத்தரவில் குறிப் பிடப்படும் அதிகாரிகள் விசாரித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடலாம். 4. நகர அமைப்புகள் (1) ஒரு கிராமமோ பட்டணமோ அல்லது அவற்றின் ஒரு பகுதியோ தொழில் வளம் பெற்றதாக இருந்தாலும், தொழிலாளர் நெருங்கி வசிக்கும் இடமாக இருந்தாலும், சுக வாசஸ்தலமாக இருந்தாலும், சட்ட சபை, மேல் சபை ஆகிய இரண்டிலும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகே அதை ஒரு நகர அமைப்பாக (டவுன்ஷிப்) என்று சர்க்கார் அறிவிக்கலாம். (2) அவ்வாறு அறிவிப்புச் செய்த பிறகு அரசாங்கம் டவுன்ஷிப் கமிட்டி ஒன்றை அமைக்கலாம்.