பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பகுதியிலும் அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு கிராமமோ, பட்டணமோ கேட்டுக்கொண்டால் அதன்படி, இன்ஸ்பெக்டர் அந்த வேண்டுகோளே நிறைவேற்றலாம். கேட்டுக் கொள்ளாவிட்டாலும் நிறைவேற்றலாம். (2) இவ்வாறு வெளியிடப்படும் அறிக்கையின் ஷரத் துக்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குத் தக்கவாறு மாற்றி அமைக் கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆல்ை, முக்கிய விஷயங் களில் எந்த விதமான மாறுதலும் செய்யக்கூடாது. முந்திய ஷரத்தின் பொதுதன்மைக்குப் பாதகம் இல்லாமல், ஒரு முனிசிபல் கவுன்சிலுக்காவது அதன் தலைவருக்காவது, நிர்வாக அதிகாரிக்காவது அனுப்பப்படும் சகல குறிப்பீடுகளும் (References) பிரஸ்தாப பஞ்சாயத் துக்கும் அதன் தலைவருக்கும், நிர்வாக அதிகாரிக்கும் சம்பந் தப்பட்ட குறிப்பீடுகள் என்றும், முனிசிபல் கவுன்ஸிலின் தலைவர் எந்த ஒரு உத்தியோகஸ்தருக்காகிலும், ஊழியருக்கா கிலும் அனுப்பும் குறிப்பீடுகள் எல்லாம் முனிசிபாலிட்டி சம்பந்தமான குறிப்பீடுகள் என்றும் கொள்ள வேண்டும். முனிசிபல் எல்லேகள் எல்லாம் கிராம, பட்டன எல்லேகள் என்றும் பொருத்தமான பொருள் கொள்ள வேண்டும். 7. பஞ்சாயத்து யூனியன்களை அமைத்தல் (1) (a) சமுதாய அபிவிருத்தி, தேசிய விஸ்தரிப்புத் திட்ட சேவை ஆகிய_காரியங்களுக்காக என அமைந்துள்ள அபிவிருத்தி தொகுதி எதை வேண்டுமானலும் பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியாக அமைக்க அரசாங்கம் விரும்பினுல் அவ்விதம் அமைக்கப் போவதாக அரசாங்கம் ஒரு அறிவிப்புச் செய்யலாம். - (b) அத்தகைய பஞ்சாயத்து அபிவிருத்திப் பகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு பஞ்சாயத்து யூனியனே அமைக்கும்ப்டி கூறியும் அரசாங்கம் அறிவிப்பு வெளியிடலாம். - (2) எந்தப் பகுதி பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்படு கிறதோ, அந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் அந்த் அறிவிப்பில் காணப்படும் எதையேனும் ஆட்சேபிக்கலாம். ஆல்ை, அறிக்கை வெளியான ஆறு வாரத்துக்குள் அவர்கள் தங்கள் ஆட்சேபத்தை அரசாங்கத்தாருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் அவற்றை நன்கு ஆலோ சித்தே முடிவு செய்ய வேண்டும், -