#23 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஒவ்வொன்றும் 7-வது பிரிவின்படி வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பஞ்சாயத்து யூனியன் பெயரால் சட்டப்படி அமைக்கப்பட்ட ஒரு சபையாக விளங்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்ருகத் தொடர்ந்து இயங்கும் சபையாயிருக்க வேண்டும்; பொது வான முத்திரை உடையதாக இருக்கவேண்டும். இச் சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்தச்சட்டத்தின்படியோ ஏற்படுத்தப்பட்ட வரையறைக்கு உட்பட்டு சட்டப்படி தன் பெயரால் வழக்குத் தொடரவும், பிறரால் வழக்குத் தொடுக்கப் பெறவும் தகுதியுடைய தாயிருக்க வேண்டும். ஸ்தாவர சங்கம சொத்துக்கள் வாங்கவும், வைத்திருக்கவும். மாற்றவும், ஒப்பந்தங்கள் செய்யவும் தகுதி பெற்றிருக்க வேண்டும். எந்தக் காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட் டுள்ளதோ அந்தக் காரியங்களுக்கு அவசியமான, பொருத்த மான தகுந்த நடவடிக்கைகளே எல்லாம் எடுக்கும் தகுதி வாய்ந்ததாக விளங்க வேண்டும். 12. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்களின் எண்ணிக்கை. (1) பஞ்சாயத்து யூனியனுக்காக அமைக்கப்படும் ஒவ் வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிலும் இருப்பவர்கள்: (i) பஞ்சாயத்து யூனியன் வட்டாரத்தில் உள்ள எல்லா பஞ்சாயத்து தலைவர்களும். (ii) பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த டவுன்ஷிப் கமிட்டியிலிருந்து உத்தியோகப் பற்றற்ற அங்கத்தினர் ஒருவர், நிர்ணயிக்கப்பெற்ற முறையில் தேர்ந்தெடுக்கப் படுவார். - ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலில் பெண் அங்கத்தினர்களோ அல்லது ஷெட்யூல்டு ஜாதியினர் அல்லது ஷெட்யூல்டு வகுப்பினர்களோ இல்லாமற் போனுலோ அல்லது அவர்களது எண்ணிக்கை மூன்றுக்கு குறைவாக இருந்தாலும் அவர்களும் பங்கு கொள்கிறர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருதி, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலானது, பெண்களில் மூவரையும் ஷெட் ஆல்டு ஜாதியிலிருந்தும் ஷெட்யூல்டு வகுப்பிலிருந்தும் மூவரையும் கூட்டு அங்கத்தினர்களாக (Co-opt) நியமித்துக் கொள்ளலாம். .
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/314
Appearance