124 (2) உட்பிரிவு (1)க்கு பாதகம் இல்லாமல், (i) இது சம்பந்தமாக நிர்ணயிக்கப்படும் நிபந்தனை களுக்கு உட்பட்டு, எந்தப் பஞ்சாயத்து யூனியனையும் பிரத் யேகமாகக் குறிப்பிட்டு, அரசாங்க அறிவிப்பின் மூலம், அந்தப் பஞ்சாயத்து யூனியனில் அடங்கியுள்ள எல்லா பஞ்சாயத்து அங்கத்தினர்களும் டவுன்ஷிப் கமிட்டியின் எல்லா அங்கத் தினர்களும் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர் களாகி விடுகிருர்கள். . (ii) ஒரே ஒரு பஞ்சாயத்தோ அல்லது டவுன்ஷிப் கமிட்டியோ அடங்கிய பஞ்சாயத்து யூனியனுக இருக்கு மானுல் மேற்படி பஞ்சாயத்து அங்கத்தினர்கள் எல்லோரும் அல்லது டவுன்ஷிப் கமிட்டி அங்கத்தினர்கள் எல்லோரும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத் தினர்களாகி விடலாம். (3) ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி முழு வதற்குமோ அல்லது ஏதாவது ஒரு பகுதிக்கு மட்டுமோ பிரதிநிதித்துவம் வகிக்கும் ராஜ்ய சட்டசபை அங்கத்தினரும் (M.L.A.) அதே போல ராஜ்ய மேல் சபை அங்கத்தினரும் (M.I.C) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நடவடிக்கை களில் கலந்து கொள்ளலாம். ஆல்ை; ஒட் அளிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லே. மேலும், இதன் உட்பிரிவில் கண்டுள்ள எதுவும், பஞ்சா யத்து அபிவிருத்தி தொகுதி முழுவதற்குமோ அல்லது ஏதேனும் ஒரு பகுதிக்கு மட்டுமோ பிரதிநிதித்துவம் வகிக்கும் ராஜ்ய சட்டசபை அங்கத்தினர் (M.L.A.) அல்லது ராஜ்ய மேல்சபை அங்கத்தினர் (M.L.C) பஞ்சாயத்து தலேவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினராகி, மேற்படி கவுன்ஸில்சேர்மனுகவோ அல்லது வைஸ் சேர்மனுகவோ தேர்ந்தெடுக்கப்படும் உரிமையை தடைப்படுத்தாது. - (4) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களின் எல்லா அங்கத்தினர்களும் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, குறிப் பிடப்பட்ட தேதியில் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் காரியாலயத்துக்கு வந்து சேர வேண்டும். 18. ரத்து செய்யப்பட்ட சட்டங்கள். பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் ஏற்பட்ட தேதி முதல் அந்தப் பகுதிகளிலே கீழ்க்கண்ட சட்டங்கள் அமுலாவது ரத்து செய்யப்படும். •
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/315
Appearance