#26 விளக்கம்: ஜில்லா போர்டுக்குச் சேரவேண்டிய வரிகள், கட்டணங்கள், இதர தொகைகளேயும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வசூல் செய்து கொள்ளலாம். (vi) (a) ஜில்லா போர்டு நிர்வாகத்திலோ, பஞ்சாயத்து நிர்வாகத்திலோ உள்ள ஒய்வு விடுதிகளும் (Rest Houses) டிராவலர்ஸ் பங்களாக்களும் இனி அரசாங்கத்துக்கு மாற்றப் பட்டு, அரசாங்க நிர்வாகத்தில் இருந்து வரும். (b) ஆஸ்பத்திரிகள் எல்லாம் அரசாங்கத்துக்கு மாற்றப்பட்டு அதன் நிர்வாகத்தின் கீழ்வரும். (c) அரசாங்கத்தினரால் அறிக்கையிடப் பெற்று, ஜில்லா போர்டாரால் நடத்திவரப்பெறும் உயர்நிலைப் பள்ளிக் கூடங்களும், கைத்தொழில் பள்ளிக்கூடங்களும், தொழிற் பயிற்சிக்கூடங்களும் அவற்றின் சொத்துக்களும், கடன் பொறுப்புக்களும் அவ்வப்போது அரசாங்கம் இதற்கென பிறப்பிக்கும் விசேஷ உத்தரவில் குறிப்பிடப்படும் அதிகாரி வசம் மாற்றப்பட்டு, அவருடைய அதிகாரத்தில் இருந்து வரும. தேர்தலும் அங்கத்தினர்களின் பதவிக் காலமும் 14. அங்கத்தினர்கள் தேர்தல். பஞ்சாயத்தின் அங்கத்தினர்கள் இதற்கென வகுக்கப் பெற்ற முறையில் தேர்ந்தெடுக்கப் பெற வேண்டும்.
- இந்தச் சட்டத்தின்படி ஒருவர் ஒரு பஞ்சாயத்தில்தான் அங்கத்தினராகவோ அல்லது நியமன அங்கத்தினராகவோ பதவி வகிக்கலாம்.
15. ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு ஸ்தானங்களே ஒதுக்குவதும் பெண்களே கூட்டு அங்கத்தினராக சேர்த்துக் கொள்வதும். (1) நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு, ஒரு கிராமம் அல்லது பட்டணத்தில் ஷெட்யூல்டு வகுப்பினர் எவ்வளவு பேர் வசிக்கிருர்களோ, அந்த எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, பஞ்சாயத் தில் எத்தனை ஸ்தானங்களே ஒதுக்குவது உசிதம் என்று தோன்றுகிறதோ அத்தனை ஸ்தானங்களே ஒதுக்கி, அதாவது