133 (c) ஏதாவது ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலோடு செய்துள்ள நடப்பு ஒப்பந்தத்திலோ அல்லது அதற்காகச் செய்யப்படும் எந்த வேலைக்குமான ஒரு கம்பெனியில் (டைரக்டர் தவிர்த்து) பங்குதாரராக அல்லாமல் வேறு பாத்தியதை உடையவராக இருந்தாலும்; (d) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனி சார்பாக ஊதியம் பெறும் வக்கீலாகவோ அல்லது பஞ்ச் - -பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு எதிராக அமர்த்தப் பட்ட வக்கீலாக இருந்தாலும்; -- - - ---. (e) 1898-ம் வருஷத்திய கிரிமினல் புரோசீசர் கோட்? (Central Act of 1898) படி ஒரு கிராமம் அல்லது பட்டி னத்தின் எந்தப் பகுதியிலும் அதிகாரம் வகிக்கக்கூடிய கெளரவ மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தாலும்; - (f) ஏற்கனவே ஒரு பஞ்சாயத்தின் அங்கத்தினராக இருந்து, அவரது பதவிக் காலமானது, புதுத் தேர்தல் அமுலுக்கு வருமுன் முடிவாகாமல் இருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு பஞ்சாயத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்து அவரது பதவிக் காலம் தொடங்காமல் இருந்தாலும்; (g) பஞ்சாயத்துக்கோ அல்லது ப ஞ் ச | ய த் து யூனியன் கவுன்ஸிலுக்கோ தம்மிடம் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டுள்ளதைத் தவிர, மற்றபடி செலுத்த வேண்டிய பாக்கித் தொகை, முந்திய ஆண்டிலிருந்து நடைபெறும் ஆண்டு வரை ஏதாவது இருந்தாலும்; மேற்காணப்படும் அனேவரும் தேர்தலில் நிற்கத் தகுதி யற்றவர்கள் ஆவார்கள். - 26. அங்கத்தினர்களின் தகுதி இன்மை 28-வது பிரிவில் கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஓர் அங்கத்தினர் பதவியிலிருந்து நீங்குவது : (a) 25-வது பிரிவைச் சேர்ந்த (1)வது உட்பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு குற்றத்திற்காக அதில் விவரிக்கப் பட்டுள்ள தண்டனையை ஒரு கிரிமினல் கோர்ட்டால் விதிக்கப் பெற்ருலும்; (b) புத்தி சுவாதீனமில்லாமல் இருந்தாலும், செவிட்டு ஊமையராகவோ இருந்தாலும், குஷ்டரோகத்தால் பீடிக்கட் பட்டிருந்தாலும்;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/324
Appearance